Tamil News  /  Tamilnadu  /  Geetha Jeevan Filed The Nominations For Thoothukudi Dmks District Secretaries
அமைச்சர் கீதா ஜீவன் வேட்புமனு தாக்கல்
அமைச்சர் கீதா ஜீவன் வேட்புமனு தாக்கல்

DMK party election: திமுக உட்கட்சி தேர்தல்-அமைச்சர் கீதா ஜீவன் வேட்புமனு தாக்கல்

23 September 2022, 11:09 ISTKarthikeyan S
  • Share on Twitter
  • Share on FaceBook
23 September 2022, 11:09 IST

தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் பதவிக்கான தேர்தலில் அமைச்சர் கீதா ஜீவன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

சென்னை: திமுகவின் உட்கட்சித் தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், மாவட்டச் செயலாளர் பொறுப்பிற்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று தொடங்கியது. இதில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் பதவிக்கான தேர்தலில் அமைச்சர் கீதா ஜீவன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

ட்ரெண்டிங் செய்திகள்

திமுகவின் 15-வது உட்கட்சித் தேர்தல் கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கி, கொரோனா காரணமாக தற்போது வரை நடைபெற்று வருகிறது. கிளை கழகத் தேர்தல் முழுவதுமாக ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டச் செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று (செப்.22) தொடங்கியுள்ளது.

மாவட்ட அவைத் தலைவர், செயலாளர், 3 துணைச் செயலாளர்கள், பொருளாளர், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் நடைபெறுகின்றது.

முதல் நாளான நேற்று மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட 19 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், மாவட்ட செயலாளர், அவைத்தலைவர், துணை செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவனும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

 

<p>திமுக எம்பி கனிமொழியை சந்தித்து வாழ்த்து பெற்றாா் அமைச்சர் கீதா ஜீவன்.</p>
திமுக எம்பி கனிமொழியை சந்தித்து வாழ்த்து பெற்றாா் அமைச்சர் கீதா ஜீவன்.

மேலும், தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன், திருநெல்வேலி மத்திய மாவட்ட செயலாளர் பதவிக்கு அப்துல் வஹாப் எம்.எல்.ஏ., கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு அமைச்சர் மனோ தங்கராஜ், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

  • Share on Twitter
  • Share on FaceBook

டாபிக்ஸ்