Tamil News  /  Tamilnadu  /  Gate Exam Starts From Today Full Details Here

GATE 2024 : கேட் தேர்வு இன்று முதல் தொடக்கம்.. முழு விவரம் இதோ!

Divya Sekar HT Tamil
Feb 03, 2024 07:22 AM IST

கேட் தேர்வானது இன்று முதல் தொடங்க இருக்கிறது. கணினி வாயிலாக நடைபெறும் இத்தேர்வானது ஒவ்வொரு நாளும் காலை மற்றும் பிற்பகலில் நடத்தப்படுகிறது.

பொறியியல் கேட் தேர்வு
பொறியியல் கேட் தேர்வு

ட்ரெண்டிங் செய்திகள்

பொறியியல் படிப்பை முடிக்கும் பட்டதாரி மாணவ, மாணவிகளுக்காக தேசிய அளவில் பொறியியல் பட்டதாரி திறன் தேர்வு (கேட்) ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான கேட் தேர்வு குறித்த அறிவிப்பை பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி) வெளியிட்டது.

இந்நிலையில், இந்த தேர்வானது இன்று (பிப்.3) முதல் தொடங்க இருக்கிறது. கணினி வாயிலாக நடைபெறும் இத்தேர்வானது ஒவ்வொரு நாளும் காலை மற்றும் பிற்பகலில் நடத்தப்படுகிறது. பிப். 4, பிப். 10 மற்றும் பிப். 11 தேர்வுக்கு வரும் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை gate2024.iisc.ac.in என்ற இந்திய அறிவியல் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.

இந்த தேர்வு இரண்டு ஷிப்டுகளில் மூன்று மணி நேரம் நடைபெறும். காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரையும், பிற்பகல் 2:30 மணிக்கு தொடங்கி மாலை 5:30 மணி வரையும் இந்த தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை ஐஐஎஸ்சி, 7 ஐஐடி-க்களுடன் இணைந்து நடத்த உள்ளது. தேர்வு முடிவு மார்ச் 16-ம் தேதி வெளியிடப்பட்டு, மதிப்பெண் அட்டைகளை அதே மாதம் 23-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்