G Square: ’பண்ணூரில் எங்களுக்கு நிலமோ, சொத்தே இல்லை’ விஜய் கட்சிக்கு ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கம்!
எங்கள் வணிகப் போட்டியாளர்கள் மூலமாகவே பல உண்மைக்கு புறம்பான செய்திகள் பல தளங்களில் பரப்பப்படுகிறது என்று உறுதியாக நம்புகிறோம். இது உங்கள் கட்சி மற்றும் எங்கள் நிறுவனத்தின் நற்பெயரை பொதுமக்களின் பார்வையில் களங்கப்படுத்தக்கூடும்.

பண்ணூர் உள்ளிட்ட கிராமங்களில் நிலமோ அல்லது சொத்துக்களோ இல்லை என ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கம் அளித்து உள்ளது.
ஜி ஸ்கொயர் விளக்கம்
இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தித் தொடர்பாளர் திரு. ஜெகதீசனுக்கு ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் தெளிவான விளக்கம். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகா பண்ணூர், திருப்பந்தியூர் மற்றும் திருமேனி குப்பம் ஆகிய கிராமங்களில் எங்கள் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு எந்த நிலமோ சொத்தோ இல்லை.
தவெகவினர் விழிப்போடு இருங்கள்!
எங்கள் வணிகப் போட்டியாளர்கள் மூலமாகவே பல உண்மைக்கு புறம்பான செய்திகள் பல தளங்களில் பரப்பப்படுகிறது என்று உறுதியாக நம்புகிறோம். இது உங்கள் கட்சி மற்றும் எங்கள் நிறுவனத்தின் நற்பெயரை பொதுமக்களின் பார்வையில் களங்கப்படுத்தக்கூடும். இதுபோன்ற தவறான தகவல்களை எதிரிகள் தொடர்ந்து பரப்புவதால் அன்புக்குரிய தமிழக வெற்றிக் கழக முன்னணி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் விழிப்புடன் இருக்குமாறு நாங்கள் பணிவாக கேட்டுக்கொள்கிறோம்.