Evening Top 10 News : வினேஷ் போகத் தகுதி நீக்கம் முதல் நீட் வினாத்தாள் கசிவு வரை .. மாலை டாப் 10 செய்திகள் இதோ!-from vinesh bhoga disqualification to neet question paper leak here are the top 10 news of the evening - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Evening Top 10 News : வினேஷ் போகத் தகுதி நீக்கம் முதல் நீட் வினாத்தாள் கசிவு வரை .. மாலை டாப் 10 செய்திகள் இதோ!

Evening Top 10 News : வினேஷ் போகத் தகுதி நீக்கம் முதல் நீட் வினாத்தாள் கசிவு வரை .. மாலை டாப் 10 செய்திகள் இதோ!

Divya Sekar HT Tamil
Aug 07, 2024 05:43 PM IST

Evening Top 10 News : வினேஷ் போகத் தகுதி நீக்கம் முதல் நீட் வினாத்தாள் கசிவு வரை நாட்டில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை பற்றி உடனடியாக அறிய இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்து இருங்கள்.

வினேஷ் போகத் தகுதி நீக்கம் முதல் நீட் வினாத்தாள் கசிவு வரை .. மாலை டாப் 10 செய்திகள் இதோ!
வினேஷ் போகத் தகுதி நீக்கம் முதல் நீட் வினாத்தாள் கசிவு வரை .. மாலை டாப் 10 செய்திகள் இதோ!

மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்பு கோருவதே சரியாக இருக்கும்

Shobhakarandalaje : பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய ஒன்றிய இணையமைச்சர் ஷோபா, தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரினால் அவர் மீதான வழக்கு ரத்து செய்யப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் தகவல். செய்தியாளர்களை சந்தித்து மன்னிப்பு கோருவது குறித்து முடிவெடுக்க 10 நாட்கள் அவகாசம் வழங்கி நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மக்களவையில் விளக்கம்

ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் வினேஷ் போகத் தகுதி நீக்கப்பட்டது தொடர்பாக ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மக்களவையில் விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசுகையில்,”100 கிராம் எடை அதிகரிப்பால், பாரிஸ் ஒலிம்பிக்கில், இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி, ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி. உஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். வினேஷ் போகத்துக்கு, தேவையான உதவிகளை செய்யுமாறு பிரதமர் அறிவுறுத்தி உள்ளார். மேலும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் நாங்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறோம். அவர்களிடம் தகுதி நீக்கம் குறித்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவு

NeetPaperLeak : முதுநிலை நீட் தேர்வுக்கான வினாத்தாளும் முன்கூட்டியே கசிந்ததாக மீண்டும் ஒரு பூகம்பம் வெடித்துள்ளது மாணவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முதுநிலை நீட்தேர்வு நடைபெற இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் சமூக வலைத்தளங்களில் முன்கூட்டியே தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.

சென்னையை அடுத்த மாதவரத்தில் அமைகிறது தமிழ்நாடு டெக் சிட்டி!

TamilNaduTechCity : தமிழ்நாடு டெக் சிட்டி தொழில் வளர்ச்சி திட்டம் சென்னை மாதவரத்தில் அமையவுள்ளது. மாதவரத்தில் தமிழ்நாடு டெக் சிட்டி திட்டத்துக்காக 150 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் ஏற்கனவே முதற்கட்ட ஆய்வை மேற்கொண்டுள்ளது.

EOS-08 என்ற புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது

EOS-08 : SSLV என்ற சிறு செயற்கைக் கோள் ஏவும் ராக்கெட் மூலம் ஆக.15-ம் தேதி சுதந்திர தினத்தன்று EOS-08 என்ற புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது. ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்தப்பட உள்ள செயற்கைக் கோளில் 3 முக்கிய கருவிகள் பொருத்தப்பட உள்ளன.

வினேஷ் போகத் தகுதி நீக்கம் குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும்

Vinesh Phogat : வினேஷ் போகத்துக்கு நியாயம் வேண்டும் என இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் முழக்கமிட்டனர். வினேஷ் போகத் தகுதி நீக்கம் குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம்

Madurai : ஓய்வறையில் படுத்திருந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு திடீரென பிரசவம் ஆகி, பச்சிளம் குழந்தை கீழே விழுந்து உயிரிழப்பு. திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8 மாத கர்ப்பிணியான பிரவீனா (37), ஓய்வறையில் படுத்திருந்து எழுந்த போது திடீரென வயிற்றில் உள்ள தண்ணீர் குடம் உடைந்து ஆண் குழந்தையை பிரசவித்துள்ளார். குழந்தை கீழே விழுந்து காயம் அடைந்துள்ளது. அங்கிருந்தவர்கள் உடனே ஆம்புலன்ஸை வரவழைக்க, ராஜாஜி அரசு மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்ட நிலையில், குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

வீராங்கனை வினேஷ் போகத்துக்கு நடிகை சமந்தா ஆறுதல்

VineshPhogat : நீங்கள் தனி ஆள் அல்ல, உங்களுக்கும் மேலே ஒரு சக்தி எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறது. எப்போதும் நாங்கள் உங்களுடன் நிற்போம் என மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு நடிகை சமந்தா ஆறுதல் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி வல்லநாடு ஷூட்டிங் ரேஞ்சில் காவலர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

தூத்துக்குடி வல்லநாடு ஷூட்டிங் ரேஞ்சில் பசுபதிமாரி (28) மயங்கி விழுந்து உயிரிழந்தார். கீழவல்லநாடு வாட்டர் டேங்க் அருகே ஓட்ட பயிற்சியின் போது பசுபதிமாரி மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.