Top 10 TamiNadu News: சட்டப்பேரவைக்கூட்டத்தொடர் முதல் இரட்டை இலை சின்ன வழக்கு வரை.. தமிழ்நாட்டின் முக்கிய 10 செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 Taminadu News: சட்டப்பேரவைக்கூட்டத்தொடர் முதல் இரட்டை இலை சின்ன வழக்கு வரை.. தமிழ்நாட்டின் முக்கிய 10 செய்திகள்

Top 10 TamiNadu News: சட்டப்பேரவைக்கூட்டத்தொடர் முதல் இரட்டை இலை சின்ன வழக்கு வரை.. தமிழ்நாட்டின் முக்கிய 10 செய்திகள்

Marimuthu M HT Tamil
Nov 25, 2024 02:17 PM IST

Top 10 TamiNadu News: சட்டப்பேரவைக்கூட்டத்தொடர் முதல் இரட்டை இலை சின்ன வழக்கு வரை.. தமிழ்நாட்டின் முக்கிய 10 செய்திகள் குறித்து பார்ப்போம்.

Top 10 TamiNadu News: சட்டப்பேரவைக்கூட்டத்தொடர் முதல் இரட்டை இலை சின்ன வழக்கு வரை.. தமிழ்நாட்டின் முக்கிய 10 செய்திகள்
Top 10 TamiNadu News: சட்டப்பேரவைக்கூட்டத்தொடர் முதல் இரட்டை இலை சின்ன வழக்கு வரை.. தமிழ்நாட்டின் முக்கிய 10 செய்திகள்
  • தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் வரும் டிசம்பர் 9ம் தேதி காலை தொடங்குகிறது. எத்தனை நாட்கள் அவை நடைபெறும் என்பதை அன்றைய தினம் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடத்தி முடிவு செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
  • ’’மழை வருகிறதோ இல்லையோ, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. உரிய பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். முன்னதாக, மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரே கூரையின் கீழ் 6 சேவைகள் வழங்க, சென்னை கண்ணகி நகரில் விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தக்கது.
  • மதுரை கள ஆய்வு கூட்டத்தில் அதிமுகவினர் இடையே மோதல் வெடித்துள்ளது. நெல்லை, கும்பகோணம், கன்னியாகுமரியைத் தொடர்ந்து மதுரையிலும் கள ஆய்வுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் அதிமுகவினர் அடிதடியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குறைந்த மழை அளவும் ஏற்றப்பட்ட புயல் எச்சரிக்கை கூண்டும்:

  • தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 1% குறைவாகவும், சென்னையில் இயல்பை விட 9% குறைவாகவும் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, சென்னை, கடலூர், நாகை, எண்ணூர் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
  • இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரிய மனு மீது ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. முன்னதாக, அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வரும் வரை, சின்னத்தை யாருக்கும் ஒதுக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி சூரியமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில் கடந்த பிப்ரவரி மாதம் அளித்த மனு மீது தேர்தல் ஆணையம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
  • பெண் எஸ்.பி. அளித்த பாலியல் புகாரில் பிடிவாரண்ட் எச்சரிக்கை விடுத்ததால் ஓய்வுபெற்ற ஐ.ஜி. முருகன், சைதாப்பேட்டை மாநகர நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். அதனைத்தொடர்ந்து பிடிவாரண்ட் விலக்கிக்கொள்ளப்பட்டது. விசாரணைக்கு ஆஜராகாததால் கடந்த முறை நீதிமன்றம் பிடிவாரண்ட் எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஒரு வாரமாக ஏறிக்கொண்டு சென்ற தங்கத்தின் விலை இன்று சிறிது சரிவு:

  • கோவையில்'No Oil - No Boil' என்னும் எண்ணெய் இல்லாத உணவு சமைக்கும் போட்டியில் கோவை சிறுவர்கள் பங்கேற்று அசத்தினர். மேலும், சாண்ட்விச், பீசா, வாழைப்பூ வடை, பாதாம், முந்திரி, பேரீச்சம்பழம், லாலிபாப் என 20-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை குழந்தைகள் செய்து அசத்தினர்.
  • சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.57 ஆயிரத்து 600க்கும் ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 200க்கும் விற்பனையாகிறது. கடந்த ஒரு வாரமாக ஏறுமுகமாக இருந்த தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.
  • தனது காரின் மீது துடைப்பம் விழுந்ததற்காக மாணவனை தாக்கிய விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டம் பாப்பாபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனை கடந்த 22ம் தேதி தலைமை ஆசிரியர் தாக்கியதில், கை எலும்பு முறிவு ஏற்பட்டது. பெற்றோர் அளித்த புகாரில் விசாரணை நடத்திய போலீசார் இன்று 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தலைமை ஆசிரியர் சந்திரமோகனை கைது செய்தனர். மாடியில் உள்ள வகுப்பை மாணவன் கூட்டும் போது, துடைப்பம் கீழே நிறுத்தப்பட்டிருந்த சந்திரமோகனின் கார் மீது விழுந்துள்ளது. இதற்காக மாணவனை அவர் தாக்கியதாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
  • தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் ஆகிய 2 நாட்கள் அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அப்போது 12 முதல் 20 செ.மீ வரை மழைப்பொழிவிற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.