தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  From Screen Idol To People's Leader: Mgr's Unforgettable Journey

MGR: ’ஏழைத் தாயின் மகன் TO ஏழைகளின் நாயகன்!’ எம்ஜிஆர் செய்த தரமான சம்பவங்கள்!

Kathiravan V HT Tamil
Jan 17, 2024 05:00 AM IST

”1977 முதல் 1987 வரை தொடர்ந்து மூன்று முறை தமிழக முதல்வராகப் பதவி வகித்த எம்ஜிஆர் சாகும் வரை முடிசூடா மன்னன் ஆக இருந்தார்”

எம்ஜிஆர்
எம்ஜிஆர்

ட்ரெண்டிங் செய்திகள்

நாடக நடிகர் முதல் சினிமா நட்சத்திரம் வரை 

மூன்றாம் வகுப்புடன் எம்ஜிஆரின் படிப்பு நின்றுவிட்டது. எம்ஜிஆரும் அவரது சகோதரர் எம்.ஜி சக்கரபாணியும் மதுரை ஸ்ரீ ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சேர்கின்றனர். பிரபல நடிகர் காளி என்.ரத்தினத்திடம் நடிப்பு பயிற்சி எம்ஜிஆர் கற்றுக் கொள்கிறார். அந்த கம்பெனியிலேயே நடிப்பு, வசனம், பாட்டு, நடனம், வாள், சிலம்பம் போன்ற பயிற்சிகளை கற்றுக் கொள்கிறார்.

1936ஆம் ஆண்டில் வெளியான அவரது முதல் படமான சதி லீலாவதி மூலம் துணை நடிகராக சினிமாவில் அறிமுகமானார். 

ஹீரோவாக அவர் நடித்த படங்களில் ஹிட் அடிக்க தொடங்கின. 1958 ஆம் ஆண்டு தனது சொந்த தயாரிப்பில் நாடோடி மன்னன் என்ற திரைப்படத்தை இயக்கி, நடித்து வெளியிட்டார். அந்த திரைப்படம் மக்கள் மத்தியில் உச்சக்கட்ட வெற்றியைப் பெறுகிறது.

அரசியல் பிரவேசம் 

1950களில், ரீல் உலகில் இருந்து அரசியல் மேடைக்கு மாறிய எம்.ஜி.ஆரின் வாழ்க்கையில் வியத்தகு திருப்பம் ஏற்பட்டது.  

அறிஞர் அண்ணாவை 1952 ஆம் ஆண்டு எம்ஜிஆர் சந்தித்து அரசியலில் ஈடுபடுகிறார். இது எம்ஜிஆரின் திறப்பட வெற்றிகளுக்கும், திமுக மக்களிடம் சென்றடையவும் காரணமாக இருந்தது. 

1962 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு எம்.எல்.சியாக எம்ஜிஆர் தேர்வானார். 1967ஆம் ஆண்டு தேர்தலில் பரங்கிமலைத் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார்.  

1969 ஆம் ஆண்டில் அறிஞர் அண்ணா மறைவுக்கு பிறகு கலைஞர் கருணாநிதி உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 1971 ஆம் ஆண்டு திமுகவில் இருந்து எம்ஜிஆர் நீக்கப்பட்டார். 

1972 இல், அவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) கட்சியை நிறுவினார், தமிழ்நாட்டின் தலைவிதியை வடிவமைக்கும் ஒரு அரசியல் சக்தியை உருவாக்கினார்.

முடிசூடா மன்னன் 

1977 முதல் 1987 வரை தொடர்ந்து மூன்று முறை தமிழக முதல்வராகப் பதவி வகித்த எம்ஜிஆர் சாகும் வரை முடிசூடா மன்னன் ஆக இருந்தார்.  உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த எம்ஜிஆர் 1987 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி அன்று அதிகாலை இயற்கை எய்தினார். பல பட்டங்களைப் பெற்றாலும், உயர் பதவியை அடைந்தாலும் தான் வாழ்ந்த தடத்தைப் பறைசாற்றும் விதத்தில் இன்று வரை அவர் பெயர் மக்கள் மத்தியில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. 

WhatsApp channel

டாபிக்ஸ்