Breast Milk Feeding: தமிழ்நாட்டில் முதல் முறையாக தாய்ப்பால் வங்கி சேவை அறிமுகம்
தமிழ்நாட்டில் முதன்முதலாக ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் ஆப் காட்டன் சிட்டி இணைந்து தாய்ப்பால் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. பச்சாபாளையம் பகுதியில் 24*7 இயங்கும் தாய்பால் ஏ.டி.எம். இல் இலசமாக தாய்பால் விநியோகம் செய்யப்படுகிறது.

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, ரோட்டரி கிளப் ஆப் காட்டன் சிட்டி இணைந்து தாய்ப்பால் வங்கியை கோவை பச்சாபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா ஊரக மருத்துவ மையத்தில் தொடங்கப்பட்டது .
தாய்ப்பால் தேவைப்படும் குழந்தைகளுக்காக இந்த சேவை தொடங்கப்பட்டது.
தாய்ப்பால் தேவைப்படும் குழந்தைகள் மற்றும் தாய்ப்பால் போதிய அளவில் இல்லாத தாய்மார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாலூட்டும் தாய்மார்களை ஊக்குவிக்கவும், பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்கவும் இந்த தாய்ப்பால் வங்கி சேவை தொடக்கப்பட்டருக்கிறது
இந்த நிகழ்ச்சிக்கு எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஸ்ரீ டி.லட்சுமிநாராயணசுவாமி தலைமை வகித்தார்.
தாய்ப்பால் வங்கி என்பது, குறைப்பிரசவ குழந்தைகள், கைக்குழந்தைகள் மற்றும் தாய்ப்பால் இல்லாத தாய்மார்களின் குழந்தைகளுக்கு தாய்ப்பாலை தானம் செய்யவும், பெறவும் நம்பகமான மற்றும் பாதுகாப்பான நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் புதிய முயற்சியாகும்.
பச்சாபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா ஊரக மருத்துவ மையத்தில் அமைந்துள்ள தாய்ப்பால் வங்கி 24 மணி நேரம் செயல்படக்கூடியதாக உள்ளது. இதன் முக்கிய குறிக்கோளாக பச்சிளம் குழந்தைகள் மற்றும் தாய்ப்பால் இல்லாத தாய்மார்களின் குழந்தைகளுக்கு எப்பொழுதும் தாய்ப்பாலின் தேவையை நிவர்த்தி செய்து, அவர்களின் ஆரோக்கியத்துக்கும், வளர்ச்சிக்கும் உதவுவதாகும்.
பச்சாபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா ஊரக மருத்துவ மையத்தில் அமைந்துள்ள தாய்ப்பால் வங்கி தாய்மார்கள் தாய்ப்பாலை தானம் செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது.
நன்கொடையாளர்களால் வழங்கப்படும் தாய்ப்பால் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் 2021ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நெக்டார் ஆஃப் லைஃப் மையத்தை சென்றடையும். அங்கு அதன் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க கடுமையான ஸ்கிரீனிங் மற்றும் பாஸ்டுரைசேஷன் நடைமுறைகள் மேற்கொள்ளப்படும். மேலும், தாய்ப்பால் தேவைப்படும் குழந்தைகள், தாய்மார்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு இங்கிருந்து தாய்ப்பால் இலவசமாக வழங்கப்படுகிறது.
பச்சிளம் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து, போதுமான வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றை முழுமையாக உள்ளடக்கிய உணவாக தாய்ப்பால் உள்ளது. தாய்ப்பால் வங்கியில் இன்று வரை 9 லட்சம் மில்லி லிட்டருக்கு மேல் பால் சேகரிக்கப்பட்டு கோவை மற்றும் கொங்கு மண்டலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏழை குழந்தைகளுக்கு சுமார் 8.5 லட்சம் மில்லி லிட்டர்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்