Annamalai: ‘கதம்! கதம்! முடிஞ்சது முடிஞ்சுபோச்சு’ இமயமலையில் அண்ணாமலை! பாபா முத்திரையை காண்பித்து பரவசம்!
தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்ட நிலையில், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இமயமலையில் இருப்பது போல் வெளியாகி உள்ள படம் வைரல் ஆகி வருகிறது.

தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்ட நிலையில், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இமயமலையில் இருப்பது போல் வெளியாகி உள்ள படம் வைரல் ஆகி வருகிறது.
தேசிய பொதுக்குழு உறுப்பினர்
பாஜக மாநிலத் தலைவர் பதவிக்காலம் முடிந்ததால் நடத்தப்பட்ட தேர்தலில் வேறு யாரும் விருப்பமனுத்தாக்கல் செய்யாததால் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டார். முன்னாள் பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலைக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி அறிவிக்கப்பட்டது. மேலும் டெல்லி அரசியலுக்கு அண்ணாமலையின் நிர்வாக திறன் பயன்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்து இருந்தார்.
செருப்பு அணிந்த அண்ணாமலை
கடந்த மார்ச் 12ஆம் தேதி சென்னை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற பாஜக புதிய மாநிலத் தலைவர் பதவியேற்பு விழாவில் நயினார் நாகேந்திரன் வேண்டுகோளை ஏற்று அண்ணாமலை காலி செருப்பு அணிந்தார். முன்னதாக திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய போவது இல்லை என அறிவித்து இருந்தார். மேலும் இனி மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் இருப்பதால், அவர் ‘டிபென்ஸ்’ செய்வார். நான் ’டிபென்ஸ்’ செய்வேன் என்றும் பேசி இருந்தார்.
அண்ணாமலை இமயமலை பயணம்
இந்த நிலையில் அண்ணாமலை இமயமலை பயணம் மேற்கொண்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாஜக நிர்வாகி வினோஜ் செல்வம் ’எக்ஸ்’ வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள இடுகையில், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை பாபா முத்திரை உடன் இருப்பது போல் படத்தை பகிர்ந்து உள்ளார். மேலும் ”திரு.அண்ணாமலை அவர்களின் ஆன்மீகப் பயணத்தைபார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மகா அவதார் பாபாஜி அவரை நிறைவாக ஆசீர்வதிப்பாராக. மேலும் பாபா முத்திரை என்னுள் இருக்கும் ரஜினிகாந்த் ரசிகரை உற்சாகப்படுத்துகிறது” என்றும் அவர் பதிவிட்டு உள்ளார்.
