2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அல்ல.. பாஜக ஆட்சி தான்.. அண்ணாமலை பரபரப்பு பேட்டி!
2026-ல் கூட்டணி ஆட்சி என்று நான் சொல்லமாட்டேன். நான் பாஜக ஆட்சி என்று தான் சொல்வேன் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் இன்று (ஜூன் 12) செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், " பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தலின் படி இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்று வருகிறது. வருகின்ற காலத்தில் மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரனின் அறிவுறுத்தலின் படி மற்ற பகுதியில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறும்.
மத்திய பாஜக அரசு ஒவ்வொரு தேர்தலின் போதும் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளது. 2014, 2019 ஆம் ஆண்டு நாங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் எடுத்து படிக்க வேண்டும். 2014 ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதிஇல் கூறியபடி பல கோடி ரூபாய் மதிப்பிலான கருப்பு பணங்கள் மீட்கப்பட்டுள்ளது, பழங்குடியினருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதேபோல் மகளிருக்கு பாராளுமன்றத்தில் இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டது, சட்டப்பிரிவு 370 அகற்றப்பட்டு இந்தியாவோடு காஷ்மீர் இணைக்கப்பட்டது, ஆயுஷ்மான் பாரத் திட்டம், தூய்மை பாரத திட்டம், பயிர் கடன், பிரதமரின் கிசான் உதவித்திட்டம், ஜந்தன் யோசனா, முத்ரா கடன் உதவி, ஜல்ஜீவன் திட்டம், தூய்மை பாரத திட்டம், உஜ்வாலா திட்டம், ஆவாஸ் ஜோசனா, பயிர் காப்பீடு திட்டம் என ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.