முன்னாள் எம்.எல்.ஏ கோவை செல்வராஜ் திடீர் மரணம்! மகனின் திருமணத்திற்கு திருப்பதி சென்ற போது சோகம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  முன்னாள் எம்.எல்.ஏ கோவை செல்வராஜ் திடீர் மரணம்! மகனின் திருமணத்திற்கு திருப்பதி சென்ற போது சோகம்!

முன்னாள் எம்.எல்.ஏ கோவை செல்வராஜ் திடீர் மரணம்! மகனின் திருமணத்திற்கு திருப்பதி சென்ற போது சோகம்!

Kathiravan V HT Tamil
Nov 08, 2024 09:01 PM IST

மகனின் திருமணத்திற்காக திருப்பதி சென்ற நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது

முன்னாள் எம்.எல்.ஏ கோவை செல்வராஜ் திடீர் மரணம்! மகனின் திருமணத்திற்கு திருப்பதி சென்ற போது சோகம்!
முன்னாள் எம்.எல்.ஏ கோவை செல்வராஜ் திடீர் மரணம்! மகனின் திருமணத்திற்கு திருப்பதி சென்ற போது சோகம்!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்தவர் கோவை செல்வராஜ் (66). முன்னாள் எம்.எல்.ஏ.வான இவருக்கு 'சிறுவணி' என்னும் மினரல் வாட்டர் நிறுவனம் சொந்தமாக உள்ளது. 

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் அதிமுக சார்பில் பேச்சாளராக ஊடகங்களுக்கு அறிமுகம் ஆன கோவை செல்வராஜ், தற்போது அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க தலைமைக் கழக செய்தி தொடர்பு துணை செயலாளராக இருந்து வந்தார். இவரது மனைவி கலாமணி. இத்தம்பதியினருக்கு விக்னேஷ், முருகானந்தம், வெங்கட்ராம் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இவர்களில், முதல் 2 மகன்களுக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. இருவரும் சென்னையில் வசிக்கின்றனர். 

மூன்றாது மகன் வெங்கட்ராம் கோவையில் வசிக்கிறார். இவருக்கும், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சம்சிகாபுரத்தை சேர்ந்த சஞ்சீவி - சிவமுத்து தம்பதியினர் மகள் பவித்ராவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இவர்களது திருமணம் திருப்பதி ஏழுமலையான் கோவில் தத்தாத்ரேயர் சுவாமி தேவஸ்தான மண்டபத்தில் நேற்று முன்தினம் நடந்தது. நேற்று அங்கேயே திருமண வரவேற்பு விழாவும் நடந்தது. அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்து விட்டு, மணமக்கள் மற்றும் இருவீட்டாரின் பெற்றோர் காரில் கோவை திரும்புவதற்காக திருமலையில் இருந்து கீழே இறங்கினர். 

அப்போது, கோவை செல்வராஜ்-க்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

அவரது உடல், காரில் கோவை கொண்டு வரப்படுகிறது. நாளை காலை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, இறுதிச் சடங்கு நிகழ்ச்சி நடக்கிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.