Madurai AIADMK : ‘அதிமுக-பாஜக கூட்டணியை விமர்சித்தால்.. தமிழகம் முழுவதும் போராட்டம்’ ஆர்.பி.உதயக்குமார் அறிவிப்பு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Madurai Aiadmk : ‘அதிமுக-பாஜக கூட்டணியை விமர்சித்தால்.. தமிழகம் முழுவதும் போராட்டம்’ ஆர்.பி.உதயக்குமார் அறிவிப்பு!

Madurai AIADMK : ‘அதிமுக-பாஜக கூட்டணியை விமர்சித்தால்.. தமிழகம் முழுவதும் போராட்டம்’ ஆர்.பி.உதயக்குமார் அறிவிப்பு!

Stalin Navaneethakrishnan HT Tamil
Published Apr 13, 2025 10:04 AM IST

Madurai AIADMK : ‘பிள்ளை இல்லாத வீட்டிலே, கிழவன் துள்ளி விளையாடுவதை போல என்று கிராமத்திலே பழமொழி சொல்லுவார்கள், அதை போல திமுக இருந்தது’

Madurai AIADMK : ‘அதிமுக-பாஜக கூட்டணியை விமர்சித்தால்.. தமிழகம் முழுவதும் போராட்டம்’ ஆர்.பி.உதயக்குமார் அறிவிப்பு!
Madurai AIADMK : ‘அதிமுக-பாஜக கூட்டணியை விமர்சித்தால்.. தமிழகம் முழுவதும் போராட்டம்’ ஆர்.பி.உதயக்குமார் அறிவிப்பு!

இது தொடர்பாக முன்னாள் அமைச்சரும், எதிர்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி.உதயக்குமார், மதுரையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஸ்டாலின் தலைமையில் இடி விழுந்துள்ளது

‘‘தமிழ்நாட்டிலே மகிழ்ச்சி வெல்லும் கரைபுரண்டு ஓடக்கூடிய ஒரு காட்சியை நாம் இன்றைக்கு பார்க்க முடியும் என்பது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாரதிய ஜனதா கட்சியுடன் இன்றைக்கு வெற்றிக் கூட்டணியை எடப்பாடியார் என்கிற ஒரு சாமானியர் ஒரு சரித்திரம் படைத்திருக்கின்ற மாபெரும் வெற்றி கூட்டணியை அமர்த்தியுள்ளார்.

இதைகண்டு இன்றைக்கு நடுநடுங்கி போயிருக்கிறது ஆளுகிற திராவிட முன்னேற்றக் கழக அரசு என்று சொன்னால், இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகம் தங்கள் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி மக்களுக்கு எள் முனை அளவும் சேவை செய்யாத காரணத்தினாலே, தங்களுடைய அதிகார துஷ்பிரேகத்தை பயன்படுத்தி ,குறுக்கு வழியில் மீண்டும் ஆட்சியை தொடரலாம் என்று பகல் கனவு கண்டு கொண்டிருந்த ஸ்டாலினுக்கு தற்போது தலையை இடி விழுந்தது போல உள்ளது.

விளம்பர வெளிச்சத்தில் விளையாட்டு

இந்த அறிவிப்பை இன்றைக்கு நாடு முழுவதும் வரவேற்றுக் கொண்டிருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் ஸ்டாலின் கையில் இருக்கிற உளவுத்துறை கொடுத்திருக்கிற அறிக்கை இனி திமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாய் இருக்கிறது என்கிற அந்த நடுக்கத்தில், அச்சத்திலே உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிற ஸ்டாலினின் அறிக்கையை யாரும் பொறுப்படுத்த தயாராக இல்லை.

இதுவரையில் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஸ்டாலின் அரசு சூழ்ச்சி, சூது நயவஞ்சகம் என்று பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம் அதை மூலதனமாக வைத்து தமிழக மக்களை ஏமாற்றி விளம்பர வெளிச்சத்தில் அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

இப்போது உண்மையை உலகத்திற்கு உரக்கச் செல்வதற்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான வெற்றி கூட்டணியை சாமானியர் எடப்பாடியார் இன்றைக்கு இந்த வெற்றி கூட்டணி அமைத்து சரித்திரம் படைத்திருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல், இன்றைக்கு எடப்பாடியாரை குறைத்து மதிப்பிட்டவர்கள் எல்லாம் இன்றைக்கு நெஞ்சடைத்து போய், வாயடைத்து போய் உள்ளனர்.

நீலி கண்ணீர் வடித்து வரும் ஸ்டாலின்

தமிழக மக்களுக்காக உருவாக்கி இருக்கிற இந்த வெற்றி கூட்டணி இந்த ஊழல் சாம்ராஜ்யத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறது. சர்காரியா ஊழலில் இருந்து தொடங்கி, வீராணம்,பூச்சிக்கொல்லி மருந்து தொடங்கி பல்வேறு ஊழல் சாம்ராஜ்யம் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரு அரசு என்ற அடிப்படையிலே, இன்றைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைமையிலே உருவாகி இருக்கிற அந்த வெற்றி கூட்டணி மூலமாக, மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள் இன்றைக்கு தமிழகம் இந்திய திருநாட்டில் தலை குனிந்து நிற்பதை பட்டியிலிட்டு சொன்னார்கள், டாஸ்மாக் 39,000 கோடிக்கு ஊழல்நடைபெற்றது என்று சொன்னார்.

தமிழகத்திலே பாலாறு, தேனாறு ஓடும் என்று சொன்ன ஸ்டாலினே உங்கள் ஆட்சியிலே இன்றைக்கு சாராய ஆறு தான் ஓடுகிறது. பாரத பிரதமர் இங்கே பாம்பன் பாலத்தை திறக்க வருகிற போது மூன்று மடங்கு நிதி கொடுத்திருக்கிறோம் என்று சொல்லுகிறார் ஆனால் பணமே வரவில்லை என்று 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் கூட நிதி தராமல் நீலிகண்ணீர் வடித்து வருகிறார் ஸ்டாலின்.

அந்த நாள் தொலைவில் இல்லை

இந்த கையாளாகாத அரசை, நீலிக்கண்ணீர் வடிக்கிற அரசை வைத்து கொண்டு, ஆட்சி அதிகாரத்தை வைத்து தன் பிள்ளைகளை வளர்த்துக் கொள்கிற இந்த அரசுக்கு இனியும் வெண்சாமரம் வீசுவார்கள் என்று நினைத்தால், அவர்கள் தலையிலே இருந்திருக்கிற இடியாய், இன்றைக்கு அதிர்ச்சியிலே உறைந்து போய், சட்டமன்றத்தில் ஸ்டாலின் சொல்லுகிறார் ஆளும் அதிமுக அரசு என்று, நிச்சயம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சட்டசபையில் ஆளுகிற வரிசையில் உட்கார்ந்து எடப்பாடியார் முதலமைச்சராக இருந்து இந்த நாட்டு மக்களுக்கு திட்டங்களை வழங்குகிற அந்த நாள் தொலைவில் இல்லை.

ஆகவே பிள்ளை இல்லாத வீட்டிலே, கிழவன் துள்ளி விளையாடுவதை போல கிராமத்திலே பழமொழி சொல்லுவார்கள், அதை போல திமுக இருந்தது. பிரித்தாலும் சூழ்ச்சியில் இருந்த உங்களுக்கு, மக்கள் விரும்பும் அந்த மகத்தான வெற்றி கூட்டணியை ஒரு எளிமையானவர் இன்றைக்கு வலிமையான கூட்டணி அமைத்திருக்கிறார் ,ஒரு சாமானியர் ஒரு சரித்திரம் படைத்த இந்த கூட்டணியை அமைத்திருக்கிறார்.

தமிழக மக்கள் பொறுப்படுத்த போவதில்லை

இன்றைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஒரு ஆச்சரியப்படத்தக்க, வரவேற்கத்தக்க மகிழ்ச்சி அடையக் கூடிய கூட்டணி அமைத்து காட்டியிருக்கிறார் என்று சொன்னால் அதை பொறுத்துக் கொள்ள முடியாத வஞ்சகர்கள் வசை பாடுவது, அதை பொறுத்துக்கொள்ள மனம் இல்லாதவர்கள், ஏற்றுக்கொள்ளாதவர்கள் ஏகடியும் செய்வதை,மனம் இல்லாத அந்த வஞ்சகர்களை பற்றி தமிழ்நாட்டு மக்கள் பொறுப்படுத்த போவதில்லை .

ஆகவே தமிழ்நாட்டு மக்கள் மீது இடியாக இறங்கிய மின்சார கட்டண உயர்வு, தமிழ்நாட்டு மக்கள் மீது இடியாக இறங்கி இருக்கிற சட்ட ஒழுங்கு பிரச்சனை, போதைப்பொருள் நடமாட்டம், பாலியல் வன்கொடுமைகள் ,என்று ஆயிரம் இடியை தமிழகமக்களுக்கு அவர் வாடிக்கையாக வைத்திருக்க ஸ்டாலினுக்கு இந்தக் கூட்டணி என்பது தலையில் இடியாய் விழுந்திருக்கிறது.

சட்டமன்றத்திலேயே உளறுகிறார், மக்கள் மன்றத்தின் உளறுகிறார், இனி ஸ்டாலின் எதிர்காலம் உளறுகிறார் மட்டுமே தான் தமிழ்நாட்டு மக்களுக்கு அவர் கொடுக்கக்கூடிய பரிசாக அமையும்.

தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவோம்

ஆகவே இனி ஸ்டாலின் பருப்பு வேகாது ஏனென்றால் அடுப்பு அமர்ந்து போய் பல நாள் ஆகிவிட்டது. ஊழல் அடுப்பு, வஞ்சக அடுப்பு, சூழ்ச்சி அடுப்பு, சூது அடுப்பு, துரோக அடுப்பு அடைந்து விட்டது இனி ஸ்டாலின் என்ற பிஸ்தா பருப்பு தமிழகத்தில் ஒருபோதும் வேகாது.

இந்த கூட்டணியை குறித்து நீங்கள் தொடர்ந்து அவதூறாக பேசுகிறீர்கள் என்று சொன்னால் , எடப்பாடியார் ஆணைபெற்று தமிழக முழுவதும் கழக அம்மா பேரவை நாங்கள் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தயங்க மாட்டோம்,

ஒரு கூட்டணி அமைகிறது என்று சொன்னால் அதை ஆரோக்கியமாக விமர்சிக்க வேண்டுமே தவிர,இது போன்ற அரசியல் நாகரிகம் இல்லாமல் வார்த்தைகளை பயன்படுத்துவது தமிழ்நாட்டு அரசியலுக்கு உகந்ததல்ல.

நீங்கள் பாரதிய ஜனதா கட்சியில் கூட்டணி அமைத்து மத்தியிலே எத்தனை அமைச்சரவைகளை பெற்றீர்கள் என்பதை மறந்து விடக்கூடாது. ஆகவே நீங்கள் எத்தனை ஆண்டுகள் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி வைத்து நீங்கள் ஆட்சி கட்டிலில் அதிகாரத்தில் அமர்ந்திருந்தீர்கள் என்பதை மறந்து விட்டு பேசுகிற ஸ்டாலின் அவர்களே..

மக்களுக்கு விருந்தளிக்கப் போகும் கூட்டணி

உங்களுக்கு மறதி நோய் வந்திருந்தால் அதற்கு தமிழ்நாட்டு மக்கள் பொறுப்பாக முடியாது,ஆகவே ஒரு ஆரோக்கியமான கூட்டணி, தமிழ்நாட்டு மக்களை பாதுகாக்கிற கூட்டணி ,தமிழ்நாட்டு மக்களை வளர்ச்சி நோக்கி அழைத்துச் செல்கிற கூட்டணியை எடப்பாடியாரின் தலைமையிலே அமைந்திருக்கிறது.

ஆக்கப் பொறுத்த நீங்கள் ஆறபொருக்க வேண்டும் என்று கிராமத்தில் சொல்வார்கள் ஆகவே ஆக்கப் பொறுத்திருந்த தமிழ்நாட்டு மக்கள் ஆற பொறுத்து அவர்களுக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு விருந்தளிக்க போகிறது இந்த கூட்டணி.

சாமானியர் சொன்ன சொல் இன்றைக்கு சாதனை படைத்திருக்கிறது. இனி வருகிற காலங்களிலே அது சரித்திரம் படைக்கும், எடப்பாடியார் என்கிற சாமானியர் சாதனை படைத்த வெற்றி கூட்டணி அமைத்திருக்கிறார் இனி இந்த கூட்டணியில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலிலே சரித்திரம் படைக்கும்,’’ என்று ஆர்.பி.உதயக்குமார் கூறியுள்ளார்.

Stalin Navaneethakrishnan

TwittereMail
பா.ஸ்டாலின் நவநீதகிருஷ்ணன், இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் எடிட்டராக பணியாற்றி வருகிறார். அச்சு ஊடகம், காட்சி ஊடகம், டிஜிட்டல் ஊடகத்தில் 23 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், தேசம், சர்வதேசம், பொழுதுபோக்கு, ஜோதிடம், ஆன்மிகம், விளையாட்டு, வியாபாரம், லைப்ஸ்டைல் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளின் கீழ் செய்திகளை எழுதுவதுடன், இணையதளத்தையும் வழிநடத்தி வருகிறார். மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பிபிஏ முடித்துள்ள இவர், தினபூமி, தினமலர், நியூஸ் 18, ஏபிபி நாடு ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து, 2022 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.