Srivilliputhur: ‘பாஜக கூட்டணி.. அதிமுக கூட்டம் ஆனந்தத்தில் மிதக்கிறது..’ ராஜேந்திர பாலாஜி பரவசம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Srivilliputhur: ‘பாஜக கூட்டணி.. அதிமுக கூட்டம் ஆனந்தத்தில் மிதக்கிறது..’ ராஜேந்திர பாலாஜி பரவசம்!

Srivilliputhur: ‘பாஜக கூட்டணி.. அதிமுக கூட்டம் ஆனந்தத்தில் மிதக்கிறது..’ ராஜேந்திர பாலாஜி பரவசம்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Published Apr 12, 2025 10:26 AM IST

Srivilliputhur: எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அமைக்கப்பட்டுள்ள கூட்டணியை பார்த்து விதி பிழிங்கி பதறிப் போய் இருக்கிறது திமுக கூட்டம், அதிமுக கூட்டம் ஆனந்தத்தில் மிதக்கிறது

Srivilliputhur: ‘பாஜக கூட்டணி.. அதிமுக கூட்டம் ஆனந்தத்தில் மிதக்கிறது..’ ராஜேந்திர பாலாஜி பரவசம்!
Srivilliputhur: ‘பாஜக கூட்டணி.. அதிமுக கூட்டம் ஆனந்தத்தில் மிதக்கிறது..’ ராஜேந்திர பாலாஜி பரவசம்!

அற்புதமான கூட்டணி..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சுந்தரபாண்டியம் பகுதியில் நடைபெற்ற அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ‘‘அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ராஜதந்திரத்தோடு அற்புதமான கூட்டணியை அமைத்துள்ளார். எடப்பாடியார் என்ன செய்வார்? என்ன செய்துவிட முடியும்? என்ன செய்யப் போகிறார்? என்று பொதுமக்களும் , செய்தி சேனல்களும் எதிர்பார்த்த இந்த நேரத்தில், அற்புதமான கூட்டணியை அமைத்துள்ளார்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர முடியும், அண்ணா திமுக ஆட்சியை மலர் செய்ய முடியும் என எடப்பாடி பழனிச்சாமி காட்டியுள்ளார். அற்புதமான ராஜரத்திரத்தோடு கூட்டணி அமைத்துள்ளார்.பங்குனி உத்திரத்தன்று எடுக்கின்ற முடிவுகள் வெற்றி பெறும் என்பது ஐதீகம். இந்த ஐதீகத்தின் அடிப்படையில் வெற்றி நம் கண் முன்னே தெரிகிறது.

காட்சிகள் எல்லாம் கண்முன் வந்து செல்கிறது

2026 மே மாதம் சட்டமன்ற கதாநாயகனாக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி செல்ல இருக்கின்றார். 2026 ல் வெற்றி பெற்று ஜெயின்ட்ஜார்ஜ் கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு சிறப்புரை ஆற்றுவார் இந்த காட்சிகள் எல்லாம் எங்கள் கண்முன்னே வந்து செல்கிறது.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அமைக்கப்பட்டுள்ள கூட்டணியை பார்த்து விதி பிழிங்கி பதறிப் போய் இருக்கிறது திமுக கூட்டம், அதிமுக கூட்டம் ஆனந்தத்தில் மிதக்கிறது,’’

என்று அப்போது ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.