அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி கைது!
”சென்னை தரமணி பகுதியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி கலந்துகொண்ட நிலையில், அவரை போலீசார் கைது செய்தனர்”

திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி கைது செய்யப்பட்டு உள்ளார்.
சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து, திமுக அரசுக்கு எதிராக அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் வளர்மதி உள்ளிட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தரமணியில் ஆர்ப்பாட்டம்
சென்னை தரமணி பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமையில், வேளச்சேரி அசோக் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், அம்மா பேரவை செயலாளர் கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். காலி குடங்களுடன் பொதுமக்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். குடிநீர் தட்டுப்பாடு, மின்சார கட்டண உயர்வு, பால் விலை உயர்வு மற்றும் சுங்கவரி உயர்வு ஆகியவற்றால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிமுக குற்றம்சாட்டியது.