EPS VS Sengottaiyan: ஈபிஎஸ் குறித்த கேள்வி! பதில் தராமல் புறப்பட்டு சென்ற கே.ஏ.செங்கோட்டையன்!
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம், சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தீர்களா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் எந்த பதிலும் அளிக்காமல் சிரித்தபடி கிளம்பி சென்றார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சென்னையில் சந்தித்தீர்களா என்ற கேள்விக்கு, எந்த பதிலும் அளிக்காமல் கோவை விமான நிலையத்தில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கிளம்பிச் சென்றார்.
ஈபிஎஸ் உடன் கருத்து வேறுபாடு
அவிநாசி அத்திக்கடவு திட்ட பாராட்டு விழாவில், ஜெயலலிதா எம்ஜிஆர் படங்கள் இல்லாமல் இருந்ததற்கும், அதை வைக்க அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விழா குழுவினருக்கு அறிவுறுத்தாமல் இருந்தற்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிருப்தி தெரிவித்திருந்தார். அந்த விழாவில் பங்கேற்காமல் தவிர்த்தார்.
இதைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டங்களில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை தெரிவிக்காமல் தவிர்த்து வந்தார். இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற அரசு நிகழ்வில் பங்கேற்க சென்ற செங்கோட்டையன்,இரு தினங்களாக அங்கு முகாமிட்டிருந்தார்.
பதில் அளிக்காமல் புறப்பட்டார்
இந்நிலையில் இன்று ஈரோடு செல்வதற்காக காலை விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்திற்கு வந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம், சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தீர்களா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் எந்த பதிலும் அளிக்காமல் சிரித்தபடி கிளம்பி சென்றார்.
