’பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் நிற்கமாட்டேன்!’ மௌனம் கலைத்தார் ஜெயக்குமார்! அதிமுக குறித்து பரப்பரப்பு பேட்டி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் நிற்கமாட்டேன்!’ மௌனம் கலைத்தார் ஜெயக்குமார்! அதிமுக குறித்து பரப்பரப்பு பேட்டி!

’பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் நிற்கமாட்டேன்!’ மௌனம் கலைத்தார் ஜெயக்குமார்! அதிமுக குறித்து பரப்பரப்பு பேட்டி!

Kathiravan V HT Tamil
Published Apr 14, 2025 11:48 AM IST

”ADMK BJP Alliance: பாஜக கூட்டணி காரணமாக அதிமுகவில் இருந்து விலகுவதாக வெளியான செய்திகளை திட்டமிட்ட பொய் செய்தி என மறுத்தார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவிய மீம்கள் மற்றும் செய்திகளால் யூடியூப் சேனல்களுக்கு வருமானம் கிடைத்திருக்கலாம் என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார்”

’பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் நிற்கமாட்டேன்!’ மௌனம் கலைத்தார் ஜெயக்குமார்! அதிமுக குறித்து பரப்பரப்பு பேட்டி!
’பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் நிற்கமாட்டேன்!’ மௌனம் கலைத்தார் ஜெயக்குமார்! அதிமுக குறித்து பரப்பரப்பு பேட்டி!

தமிழ் புத்தாண்டு மாற்றம் குறித்து விமர்சனம்

ஜெயக்குமார், திமுக ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 2006-2011 காலகட்டத்தில் தமிழ் புத்தாண்டை சித்திரை மாதத்திலிருந்து தை மாதத்திற்கு மாற்றியதை கடுமையாக விமர்சித்தார். இது தமிழர் பண்பாடு மற்றும் மரபுக்கு எதிரானது எனக் கூறிய அவர், 2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சித்திரை மாதத்தை மீண்டும் தமிழ் புத்தாண்டாக அறிவித்ததை நினைவுகூர்ந்தார். 2012ல் சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முதல் தமிழ் புத்தாண்டு விழாவிற்கு தாம் தலைமை தாங்கியதை பெருமையுடன் குறிப்பிட்டார்.

அம்பேத்கரின் பிறந்தநாள் மரியாதை

அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாளையொட்டி, அவரது புகழையும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை மற்றும் கல்வி, பொருளாதார முன்னேற்றத்திற்காக அவர் ஆற்றிய பணிகளையும் ஜெயக்குமார் பாராட்டினார். அம்பேத்கரின் பிறந்தநாள் தமிழ் புத்தாண்டு நாளில் அமைந்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அதிமுக சார்பில் அவரது சிலைகள் மற்றும் படங்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

பொய் செய்திகளுக்கு மறுப்பு

பாஜக உடன் கூட்டணி வைத்தால் அதிமுகவில் இருந்து விலகுவதாக நான் சொன்னதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறி இருந்தார். “நான் எந்த நேரத்திலும் அப்படி சொல்லவே இல்லை” என ஜெயக்குமார் விளக்கம் அளித்தார்.

அதிமுகவில் இருந்து விலகியதாக தனது பெயரில் பரவி வரும் வதந்திகள் குறித்து பேசிய ஜெயக்குமார், பாஜக கூட்டணி காரணமாக அதிமுகவில் இருந்து விலகுவதாக வெளியான செய்திகளை திட்டமிட்ட பொய் செய்தி என மறுத்தார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவிய மீம்கள் மற்றும் செய்திகளால் யூடியூப் சேனல்களுக்கு வருமானம் கிடைத்திருக்கலாம் என்று நகைச்சுவையாக குறிப்பிட்ட அவர், தனது குடும்பத்தின் 75 ஆண்டு கால திராவிட பாரம்பரியத்தையும், அதிமுகவிற்கு தனது விசுவாசத்தையும் வலியுறுத்தினார். “பதவிக்காக யாருடைய வீட்டு வாசலிலும் நின்றதில்லை, இனியும் நிற்க மாட்டேன்,” என்று உறுதியாக தெரிவித்தார்.

அதிமுகலேயே பயணம்

அதிமுகவை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தொடங்கிய நோக்கத்தை நினைவூருத்திய ஜெயக்குமார், கருணாநிதியின் தீய ஆட்சியை எதிர்க்கவே இயக்கம் தொடங்கப்பட்டதாகவும், அதே பாதையில் தனது பயணம் தொடரும் என்றும் கூறினார்.

Kathiravan V

TwittereMail
கதிரவன் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக பணியாற்றி வருகிறார். தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடக துறைகளில் 2016ஆம் ஆண்டு முதல் பணியாற்றி அனுபவம் பெற்றுள்ளார். அரசியல், தொழில்முனைவு, வணிகம், ஆன்மீகம் மற்றும் நாட்டு நடப்பு உள்ளிட்ட பிரிவுகளில் தொடர்ந்து செய்திகளை எழுதி வருகிறார். தூசி பாலிடெக்னிக் கல்லூரியில் DME பட்டயப்படிப்பும், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ அரசியல் அறிவியல் பட்டமும், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பட்டமும் முடித்து உள்ளார். புதிய தலைமுறை டி.வி., ஏபிபி நாடு ஆகிய முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்ற இவர், 2023 ஜனவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணியாற்றி வருகிறார்.
Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.