ADMK: அதிமுக பொதுக்குழு! கூட்டணி எப்போ பேசுவீங்க? எடப்பாடி முன்பே சீறிய சி.வி.சண்முகம்! அதிர்ந்த அரங்கம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Admk: அதிமுக பொதுக்குழு! கூட்டணி எப்போ பேசுவீங்க? எடப்பாடி முன்பே சீறிய சி.வி.சண்முகம்! அதிர்ந்த அரங்கம்!

ADMK: அதிமுக பொதுக்குழு! கூட்டணி எப்போ பேசுவீங்க? எடப்பாடி முன்பே சீறிய சி.வி.சண்முகம்! அதிர்ந்த அரங்கம்!

Kathiravan V HT Tamil
Dec 15, 2024 12:28 PM IST

அதிமுகவை அழித்துவிடலாம் என ஸ்டாலின் கனவு காண்கிறார். இலங்கையில் ராஜபக்சே குடும்பமும், வங்கதேசத்தில் ஷேக் அசினா குடும்பமும் மக்களால் அடித்து விரட்டப்பட்டது.

ADMK: அதிமுக பொதுக்குழு! கூட்டணி எப்போ பேசுவீங்க? எடப்பாடி முன்பே சீறிய சி.வி.சண்முகம்! அதிர்ந்த அரங்கம்!
ADMK: அதிமுக பொதுக்குழு! கூட்டணி எப்போ பேசுவீங்க? எடப்பாடி முன்பே சீறிய சி.வி.சண்முகம்! அதிர்ந்த அரங்கம்!

ஊடகங்கள் பலவீனப்படுத்த பார்க்கின்றன!

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில், இந்த அரங்கத்தில்தான் எடப்பாடியார் அவர்களை பொதுச்செயலாளராக தேர்வு செய்தோம். நம்மை யாரும் தோற்கடிக்க முடியாது. பத்திரிக்கை மற்றும் ஊடகங்களை நம்பி அதிமுக கிடையாது. கண்ணிருந்தும் காட்டாத குருடர்களே எங்கள் கூட்டத்தை பாருங்கள். எங்கே இங்கு கருத்து வேறுபாடு உள்ளது. 2026இல் எடப்பாடியார் தலைமையில் அதிமுக ஆட்சி அமையும். பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் உளவியல் ரீதியாக நம்மை பலவீனப்படுத்த பார்க்கின்றது. 

”மழை இல்லாத சென்னையில் படம் காட்டினார்”

அதிமுகவை அழித்துவிடலாம் என ஸ்டாலின் கனவு காண்கிறார். இலங்கையில் ராஜபக்சே குடும்பமும், வங்கதேசத்தில் ஷேக் அசினா குடும்பமும் மக்களால் அடித்து விரட்டப்பட்டது. புயல் மரக்காணத்தை கடக்கும் என்று சொல்லும் போது, மழையே இல்லாத சென்னையில் ஸ்டாலின் படம் காட்டினார். ஆனால் எடப்பாடியார் புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணம் கொடுத்தார். 

கூட்டணி எப்போது?

2001 ஆம் ஆண்டு தேர்தலில் 3 மாதம் வரை கூட்டணி வரவில்லை, 10 நாட்களுக்கு முன்புதான் கூட்டணி அமைந்து அதிமுக வென்றது. 2011ஆம் ஆண்டில் தேர்தல் அறிவித்து வேட்புமனு தாக்கல் செய்யும் போதுதான் கூட்டணி அமைந்தது. அதே போல் தற்போது கூட்டணி அமைப்பதை எடப்பாடியார் அமைப்பார். நாம் அமைக்கிறோமோ இல்லையோ ஸ்டாலினே நமக்கு கூட்டணியை அமைத்துக் கொடுத்துவிடுவார். அதிமுக தோல்விக்கு பிறகு மிகப்பெரிய வெற்றியை பெற்று உள்ளோம். 

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.