காருக்கு சுங்க கட்டணம் கேட்ட ஊழியர்கள்.. காரை சாலையின் குறுக்கே நிறுத்திய முன்னாள் எம்.எல்.ஏ., பயணிகள் அவதி!
‘நான் ஒரு கட்சியின் தேசிய துணைதலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்ற மரியாதை இல்லாவிட்டாலும் பரவாயில்லை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சுங்கச்சாவடியில் கட்டண சலுகை வழங்கப்படாது என உங்களது மேனேஜரிடம் சொல்லி எனக்கு கடிதம் வாங்கி கொடுங்கள்’

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.வி.கதிரவன். இவர் கடந்த 2011ஆம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பார்வேர்ட் பிளாக் கட்சி சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். பார்வர்டு பிளாக் கட்சியின் தேசிய துணைத்தலைவராக உள்ளார். இந்நிலையில் தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் கட்சியினரின் விழாக்களில் கலந்து கொண்டு விட்டு துவரங்குறிச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நத்தம் வழியாக அவரது காரில் வந்து கொண்டிருந்தார்.
மிரட்டிய டோல்கேட் ஊழியர்கள்
அப்போது திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வேம்பரளி அருகே உள்ள சுங்க சாவடியில் அவரது காரை நிறுத்திய பணியாளர்கள் கட்டணம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் நான் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்னை அனுமதியுங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு பணியாளர்கள் அவ்வாறெல்லாம் அனுமதிக்க முடியாது, பணத்தை கட்டி விட்டு ஒழுங்காக செல் என்று மிரட்டும் தொணியில் பேசியதாக கூறப்படுகிறது.
