P Chidambaram: ‘நுகர்வு குறைந்துவிட்டது.. இது இந்தியாவுக்கு நல்லதல்ல’ முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேட்டி!
P Chidambaram : ‘நுகர்வு, உற்பத்தியை அதிகரிக்க, வரும் கூட்ட பட்ஜெட்டில் ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும், குளறுபடிகளை நிவர்த்தி செய்ய வேண்டும், சலுகைகள் அளிக்க வேண்டும்’

P Chidambaram : சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
‘‘அழகப்பா பல்கலைக்கழகத்தில் முதல்வர் திறக்க உள்ள வளர் தமிழ் நூலகத்தில் 2025 ஆண்டுக்குள் 80,000 நூல்கள் வைப்பதே லட்சியம். நூல்கள் அன்பளிப்பை வரவேற்கிறோம். திருவள்ளுவர் உடையை காவியாக மாற்றியது வருத்தமளிக்கிறது. ஆளுநரை கண்டித்து பார்க்கிறோம். ஆனால் அவர் தமிழக வரலாறு, பண்பாடு திருவள்ளுவர் வரலாறு தெரியாமல் தொடர்ந்து பிழையை செய்து வருகிறார்.
ஆரியர்கள் அல்லாத ஓர் இனம் திராவிடம்
தமிழக அரசுடனான ஆளுநரின் முரண்பாட்டை ஒரு வாரத்தில் தீர்க்க வேண்டுமென்று உச்சநீதிமன்றமே தெரிவித்துவிட்டது. அரசியல் சாசன விதிகள் படி நடந்து கொள்வார் என்று நம்புகிறோம். தொடர்ந்து ஆளுநர் அரசியல் சாசன விதிகளை மீறி செயல்பட்டு வருகிறார். அயோத்தி ராமர் கோயில் திறப்பு நாளே உண்மையான சுதந்திரம் கிடைத்த நாள் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியதை கண்டிக்கிறோம். .