தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Former Dmk Mla Ku. Ka. Selvam Passed Away

Ku. Ka. Selvam: முன்னாள் MLA கு.க.செல்வம் காலமானார்!

Kathiravan V HT Tamil
Jan 03, 2024 11:49 AM IST

”உடல்நலக்குறைவால் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கு.க.செல்வம் காலமானார்”

கு.க.செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ
கு.க.செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ

ட்ரெண்டிங் செய்திகள்

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 

1997ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த நிலையில் திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தின் நிர்வாக பொறுப்புகளை கவனிக்கு தலைமை நிலைய செயலாளர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டு இருந்தது. 

இந்த நிலையில் கடந்த 2020ஆண்டில் கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதே பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்தார். 

இது தொடர்பாக திமுக தலைமை இவரிடம் விளக்கம் கேட்ட நிலையில், இவரை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கியது. 

2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் முறைப்படி பாஜகவில் இணைந்த அவர், அதே ஆண்டு நடைபெறவிருந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட திட்டமிட்ட்டார். ஆனால் அந்த வாய்ப்பு புதியதாக பாஜகவில் இணைந்த நடிகை குஷ்புவுக்கு வழங்கப்பட்டதால் பாஜக தலைமை மீது செல்வம் அதிருப்தியில் இருந்தார். 

இதனால் கடந்த 2022ஆம் ஆண்டில் பாஜகவில் இருந்து விலகி மீண்டும் திமுகவில் இணைந்தார். அவருக்கு மீண்டும் தலைமை நிலைய செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. 

உடல்நலக்குறைவால் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கு.க.செல்வம் காலமானார். 

WhatsApp channel

டாபிக்ஸ்