BJP: ’ஒரே ரெய்டுதான் மொத்த ஆட்டமும் க்ளோஸ்! அதிமுக ஐடி விங்கின் காலில் விழுந்த அண்ணாமலை!' விளாசும் திருச்சி சூர்யா!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Bjp: ’ஒரே ரெய்டுதான் மொத்த ஆட்டமும் க்ளோஸ்! அதிமுக ஐடி விங்கின் காலில் விழுந்த அண்ணாமலை!' விளாசும் திருச்சி சூர்யா!

BJP: ’ஒரே ரெய்டுதான் மொத்த ஆட்டமும் க்ளோஸ்! அதிமுக ஐடி விங்கின் காலில் விழுந்த அண்ணாமலை!' விளாசும் திருச்சி சூர்யா!

Kathiravan V HT Tamil
Dec 30, 2024 04:13 PM IST

அண்ணாமலை உத்தமன் கிடையாது, எந்த தேர்தலிலும் ஜெயிக்காமலேயே பல ஆயிரம் கோடி சொத்து சேர்த்து விட்டார், கட்சியின் தேர்தல் நிதியை மச்சான் நிதியாக பயன்படுத்தியதால்தான் தோற்றுபோனார் என முதன்முதலாக நாம்தான் சொல்லி வந்தோம் என திருச்சி சூர்யா குற்றம்சாட்டி உள்ளார்.

’ஒரே ரெய்டுதான் மொத்த ஆட்டமும் க்ளோஸ்! அதிமுக ஐடி விங்கின் காலில் விழுந்த அண்ணாமலை!' விளாசும் திருச்சி சூர்யா!
’ஒரே ரெய்டுதான் மொத்த ஆட்டமும் க்ளோஸ்! அதிமுக ஐடி விங்கின் காலில் விழுந்த அண்ணாமலை!' விளாசும் திருச்சி சூர்யா!

அதிமுகவை பாராட்டிய அண்ணாமலை 

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை கண்டித்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் அதிமுகவினர் ‘யார் அந்த Sir?’ என்ற பதாகை உடன் போராட்டம் நடத்தினர். இந்த நிகழ்வு தமிழகம் முழுவதும் பேசுபொருள் ஆன நிலையில், அதிமுகவின் போராட்டத்தை பாராட்டி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பாராட்டு தெரிவித்து இருந்தார்.

அண்ணாமலை மீது திருச்சி சூர்யா விமர்சனம்

இந்த நிலையில் ‘அதிமுக ஐடி விங்கின் காலில் விழுந்த அண்ணாமலை’ என பாஜக முன்னாள் நிர்வாகி திருச்சி சூர்யா விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், ஒரே ஒரு ரெய்டுதான் அண்ணாமலையின் மொத்த ஆட்டமும் க்ளோஸ் ! அண்ணாமலை உத்தமன் கிடையாது, எந்த தேர்தலிலும் ஜெயிக்காமலேயே பல ஆயிரம் கோடி சொத்து சேர்த்து விட்டார், கட்சியின் தேர்தல் நிதியை மச்சான் நிதியாக பயன்படுத்தியதால்தான் தோற்றுபோனார் என முதன்முதலாக நாம்தான் சொல்லி வந்தோம்.

தேர்தல் தோல்வியால் கடுப்பில் இருந்த டெல்லி, மச்சான் வீட்டுக்கு ஒரே ஒரு ரெய்டு அனுப்பி ரூ.800 கோடி வருமானத்தை கண்டுபிடித்தது. மாமனார் வீடு உள்பட இன்னும் சில ரெய்டுகள் தொடர இருந்த நிலையில் அதிமுக ஐடி விங்கின் காலில் விழுந்த அண்ணாமலை என விமர்சனம் செய்துள்ளார்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.