'80 வயசு கிழவியை கூட விடல! குஷ்புவை ஆட்டு மந்தையில் அடைப்பதா? கொதிக்கும்!' செல்லூர் ராஜூ
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  '80 வயசு கிழவியை கூட விடல! குஷ்புவை ஆட்டு மந்தையில் அடைப்பதா? கொதிக்கும்!' செல்லூர் ராஜூ

'80 வயசு கிழவியை கூட விடல! குஷ்புவை ஆட்டு மந்தையில் அடைப்பதா? கொதிக்கும்!' செல்லூர் ராஜூ

Kathiravan V HT Tamil
Jan 05, 2025 02:06 PM IST

நேற்றுக் கூட 80 வயசு பாட்டியை வன்முறை செய்ததாக பத்திரிக்கையில் வந்தது. 5 வயது முதலே விடவில்லை. இதில் திமுகவினரே அதிகம் பங்கேற்று உள்ளனர். இந்த வழக்குகளை சரியாக விசாரிக்கவில்லை.

'80 வயசு கிழவியை கூட விடல! குஷ்புவை ஆட்டு மந்தையில் அடைப்பதா? கொதிக்கும்!' செல்லூர் ராஜூ
'80 வயசு கிழவியை கூட விடல! குஷ்புவை ஆட்டு மந்தையில் அடைப்பதா? கொதிக்கும்!' செல்லூர் ராஜூ

அதிமுகதான் முன்னெடுத்தது

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அண்ணா பல்கலைக்கழக விவகரத்தில் ’யார் அந்த சார்?’ என்ற கேள்வியை எடப்பாடியார் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு முன்னெடுத்து சென்றதால்தான் மற்ற கட்சிகளும் குரல் எழுப்பினர். இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறுகின்றது. முதலமைச்சராக ஸ்டாலின் வந்த பிறகு தூங்கவே முடியவில்லை. சர்வாதிகாரியாக மாறுவேன். சவுக்கால் விளாசுவேன் என்றார். ஆனால் அன்பு சகோதரர் அண்ணாமலைதான் சவுக்கால் அடித்து தன்னையே வருத்திக் கொண்டார். 

மா.சுப்பிரமணியன் மீது விமர்சனம் 

நேற்றுக் கூட 80 வயசு பாட்டியை வன்முறை செய்ததாக பத்திரிக்கையில் வந்தது. 5 வயது முதலே விடவில்லை. இதில் திமுகவினரே அதிகம் பங்கேற்று உள்ளனர். இந்த வழக்குகளை சரியாக விசாரிக்கவில்லை. பொள்ளாச்சி விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு அன்றைய முதலமைச்சர் விட்டார். ஆனால் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடாது ஏன்?, கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் வீட்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பிரியாணி சாப்பிட்டு உள்ளார். 

ஆட்டு மந்தைகள் போல் குஷ்பு அடைப்பு

திமுக கூட்டணியில் பயணிப்பவர்கள் மக்கள் எதிர்ப்பு அலையை சந்திக்க வேண்டி இருக்கும். மாலுமி எவ்வளவு திறமையாக இருந்தாலும் கரை சேர்க்க முடியாது. இங்கு அந்த மாலுமிக்கு திறமையும் இல்லை. நேற்று கூட குஷ்புவை பிடித்து போட்டுட்டாங்க. ஆட்டு மந்தையில் சென்று ஆடுகளை அடைப்பது போல் பாஜக மகளிரணியை ஆட்டு மந்தைகளாக நினைத்து அடைத்து உள்ளனர்.  ஒரு பக்கம் குஷ்புவை கைது செய்துவிட்டு, டங்ஸ்டன் விவகாரத்தில் அண்ணன் வைகோவை சுதந்திரமாக பேச விடுகின்றனர். ஆனால் இது மத்திய அரசு விவகாரம் இல்லை. மாநில அரசு விவகாரம். மக்கள் போராட்டம் வந்த பின்னர்தான் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக முதலமைச்சரே அறிக்கைவிட்டார்.  அவை முன்னவர், மூத்த அமைச்சர் துரைமுருகன் இரவோடு, இரவாக டெல்லி சென்று உள்ளார். டங்ஸ்டன் விவகாரம் தொடர்பாக பேச டெல்லி சென்றுள்ளார் என்று நினைக்கிறேன் என கூறினார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.