பொன்முடி சர்ச்சை: ’அடுத்த கட்ட முடிவை கழக பொதுச்செயலாளர் எடுப்பார்’ ஈபிஎஸிடம் சரண்டர் ஆன செங்கோட்டையன்!
ஈபிஎஸ் உடன் அதிருப்தியில் உள்ளதாக கூறப்பட்ட செங்கோட்டையன் கழக பொதுச்செயலாளர் அடுத்தகட்ட முடிவை எடுப்பார் என கூறி உள்ளது அரசியல் விவாதங்களுக்கு வித்திட்டு உள்ளது.

பொன்முடி சர்ச்சை: ’அடுத்த கட்ட முடிவை கழக பொதுச்செயலாளர் எடுப்பார்’ ஈபிஎஸிடம் சரண்டர் ஆன செங்கோட்டையன்!
அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சு விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுப்பார் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியது அரசியல் விவாதங்களுக்கு வித்திட்டு உள்ளது. எடப்பாடி பழனிசாமி உடன் அதிருப்தியில் உள்ளதாக கூறப்பட்ட நிலையில், செங்கோட்டையனின் இந்த பேச்சு உற்று நோக்க கூடியதாக உள்ளது.
இந்து சமயத்தையும் பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசிய அமைச்சர் பொன்முடிக்கு எதிராக, அனைத்திந்திய அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கோபிச்செட்டிப்பாளையத்தில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு பின் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.
