பொன்முடி Vs செங்கோட்டையன்: ’பொன்முடி பேச்சால் 234 தொகுதிகளும் அதிமுக வெற்றி பெறும்!’ செங்கோட்டையன் நம்பிக்கை!
”பெண்களையும் கொச்சைப்படுத்தி பேசுவதற்கு இவருக்கு என்ன தகுதி இருக்கிறது? பொன்முடி அமைச்சராக இருக்க தகுதியற்றவர்"

பொன்முடி Vs செங்கோட்டையன்: ’பொன்முடி பேச்சால் 234 தொகுதிகளும் அதிமுக வெற்றி பெறும்!’ செங்கோட்டையன் நம்பிக்கை!
திமுக அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சால் 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
பொன்முடியை எதிர்த்து ஆர்ப்பட்டம்
சைவ மற்றும் வைணவ சமய குறியீடுகளை விலை மாதுக்களுடன் ஒப்பிட்டு பேசிய அமைச்சர் பொன்முடியை கண்டித்தும், அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரியும் அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோபிச்செட்டிப்பாளையம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.எஸ். செங்கோட்டையன், அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
