தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Form Committee To Prevent Tnpsc Irregularities Says Madras High Court Orders

'TNPSC குளறுபடிகளைத் தடுக்க குழு அமையுங்கள்’ - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Marimuthu M HT Tamil
Jan 13, 2024 02:12 PM IST

டி.என்.பி.எஸ்.சி குளறுபடிகளை தடுக்க விசாரணைக்குழு அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

'TNPSC குளறுபடிகளைத் தடுக்க குழு அமையுங்கள்’ - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
'TNPSC குளறுபடிகளைத் தடுக்க குழு அமையுங்கள்’ - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ட்ரெண்டிங் செய்திகள்

அரசுப்பணிகளுக்கு தேர்வு நடத்தும்போது ஏற்படும் குளறுபடிகளை தடுப்பது தொடர்பாக பரிந்துரைகள் வழங்க, ஒரு மாதத்திற்குள் விசாரணைக் குழுவை அமைக்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

விசாரணைக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை எடுக்கவும் தேர்வாணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தவிர, டி.என்.பி.எஸ்.சி தொடர்பாக உண்மைத் தகவல்களை மறைத்ததாக தேர்வாணைய அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை முடித்து 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்