தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  For Students Studying From Lkg To 12th Standard Chennai Corporation Budget Announcement

Mayor Priya:'எல்.கே.ஜி முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு..'-மாநகராட்சி பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு

Manigandan K T HT Tamil
Feb 21, 2024 11:56 AM IST

Chennai Corporation budget: சென்னை மாநகராட்சிக்கான 2024-25 ஆண்டிற்கான பட்ஜெட் ரிப்பன் மாளிகையில் இன்று காலை 10 மணி அளவில் தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு நலன்பயக்கும் திட்டங்களை அறிவித்த சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா ராஜன்
சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு நலன்பயக்கும் திட்டங்களை அறிவித்த சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா ராஜன் (X)

ட்ரெண்டிங் செய்திகள்

பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.

இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மொத்தம் 82 புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் மேயர் பிரியா.

இந்த நிதியாண்டில் என்னென்ன புதிய திட்டங்கள்? மற்றும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது என்பது குறித்து பார்ப்போம்.

சென்னை மாநகராட்சிக்கான 2024-25 ஆண்டிற்கான பட்ஜெட் ரிப்பன் மாளிகையில் இன்று காலை 10 மணி அளவில் தாக்கல் செய்யப்பட்டது.

இதில் பள்ளிக் கல்வி, விளையாட்டு திறன் மேம்பாடுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பள்ளிகளில் எல்.கே.ஜி முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூ.8 கோடியில் இலவச சீருடை வழங்கப்படும் எனவும், மாநகராட்சி பள்ளிகளில் தலா 7 கோடியில் 4 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு இலவச காலணிகள், இலவச சாக்ஸ் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2024-25ஆம் கல்வியாண்டில் இணைக்கப்பட்ட பள்ளிகள் உட்பட 208 சென்னை தொடக்கப் பள்ளிகளுக்கு தலா ரூ.25,000/- வீதமும், 130 சென்னை நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா ரூ.30,000/- வீதமும், 46 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 35 சென்னை மேல்நிலைப் பள்ளிகள் என 81 பள்ளிகளுக்கு தலா ரூ.50,000/- வீதம் என பள்ளிகளில் ஏற்படும் சிறுசிறு பராமரிப்புச் செலவுகளையும் இதர செலவினங்களையும் மேற்கொள்வதற்கு தொகை வழங்கப்படும்.

திறமை மிக்க மாணாக்கர்களை தேர்வு செய்து அவர்களுக்கு STEM பயிற்சி வழங்குதல்

சென்னை நுங்கம்பாக்கம் மேல்நிலைப்பள்ளி && SCIENCE TECHONOLOGY ENGINEERING MATHEMATICS (STEM) ACADEMY OF EXCELENCE பயிற்சி பள்ளி கடந்த 2021-2022 ஆம் கல்வி ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் நல்ல வரவேற்பினை பெற்றதனால், இத்திட்டத்தினை மேலும் விரிவுபடுத்தி 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு STEM பயிற்சி வழங்கப்படும்.

பச்சை வண்ணப் பலகைகள்

338 பள்ளிகளுக்கு, பள்ளி ஒன்றுக்கு ஐந்து வீதம் பச்சை வண்ணப்பலகைகள் வழங்கப்படும்.

208 தொடக்க மற்றும் 130 நடுநிலை சென்னை பள்ளிகள் என மொத்தமுள்ள 338 பள்ளிகளுக்கு தலா ஐந்து பச்சை வண்ணப் பலகைகள் வழங்கப்படும்.

NCC Scout & Guides பங்காற்றி வரும் மாணாக்கர்களுக்கு பயிற்சி மற்றும் சீருடைகள் வழங்குதல்

35 மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்கள் தேசிய மாணவர் படை (NCC) மற்றும் சாரண சாரணியர் இயக்கத்தில் (Scout & Guides) தங்களை ஈடுபடுத்திக்கொண்டு பயிற்சி பெற்று வரும் 2050 மாணாக்கர்களுக்கு சீருடைகள் வழங்கப்படும்.

சென்னை பள்ளி மாணவர்களுக்கு அடையாளஅட்டை வழங்குதல்

2024-25 கல்வியாண்டில் 419 சென்னை பள்ளிகளில் பயிலும் 1,20,175 மாணாக்கர்களுக்கு தன் விவரக்குறிப்பினை அறிந்து கொள்ளவும் மற்றும் பாதுகாப்பிற்காகவும் வண்ண அடையாள அட்டை (ID Card) வழங்குதல்.

மாநகராட்சியின் கீழ் இயங்கும், தொழிற்பயிற்சி நிலையத்தை மேம்படுத்தப்படுத்துதல்

சென்னை இராயப்பேட்டையில் செயல்படும் தொழிற்பயிற்சி நிலையத்தில் பல்வேறு பிரிவுகளில் தொழிற்பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள 2 வகுப்பறைகள் புதிதாகக் கட்டப்படும். மற்ற அறைகள் பழுது பார்க்கப்படும், இயந்திரங்கள் கொள்முதல் செய்யபடும் மாணவர்களுக்கு மிதிவண்டி. External Skill Training (outside) அளிக்கப்படும்.

சென்னை பள்ளிகளில் 4 மற்றும் 5 ஆம் வகுப்பில் பயிலும் 24,700 மாணாக்கர்களை சுற்றுலா அழைத்துச் செல்லுதல்

மாணாக்கர்களை தம் கற்றல் திறனை மேம்படுத்தும் விதமாக 2024-25ஆம் கல்வியாண்டில் சென்னை 208 தொடக்க பள்ளிகள் மற்றும் 130 நடுநிலைப் பள்ளிகளில் 4 மற்றும் 5 ஆம் வகுப்பு பயிலும் 24,700 மாணாக்கர்களை சென்னை சுற்றியுள்ள இடங்களுக்கு பள்ளிச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படும் திட்டம் நிறைவேற்றப்படும் என்று மேயர் ப்ரியா ராஜன் பட்ஜெட் தாக்கலின்போது தெரிவித்தார்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்