TN Governor: முக்கிய மசோதாக்களுக்கு அனுமதி - ஆளுநர் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் தகவல்
தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு அனுப்பிய பத்து மசோதாக்களில் ஆளுநர் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய தகவலை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டதில் இருந்து தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன்பே தமிழக அரசு நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிய 10 மசோதாக்களை ஆர்.என்.ரவி, தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார்.
இந்நிலையில் கடந்த நவம்பர் 18ஆம் தேதி ஒன்றுகூடிய தமிழக சட்டப்பேரவை அந்த திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது.
அதில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் கே.சி.வீரமணி, ரமணா, விஜயபாஸ்கர் ஆகியோர் மீது ஊழல் வழக்குத் தொடர்வதற்கு அனுமதி கேட்கும் மசோதா, பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் தமிழக அரசின் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா , கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் மசோதா, சென்னைப் பல்கலைக்கழகம் தவிர, மற்ற பல்கலைக்கழகங்களின் சட்டங்களைத் திருத்தும் மசோதா என 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளது.
இந்த மசோதாக்களை நிறைவேற்றித்தரும்படி, உச்ச நீதிமன்றத்திலும் ஆளுநருக்கு எதிராக தமிழக அரசின் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
அப்போது கடந்த 2020ஆம் ஆண்டு முதல் 13க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் உள்ளதாக தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி மற்றும் வில்சன் ஆகியோர் தங்களது வாதத்தை முன் வைத்தனர்.
அப்போது இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட், கடந்த நவம்பர் 10ல் ஆளுநர் தரப்பு பதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்த பின் திருப்பி அனுப்பியது ஏன், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்தார் என அடுக்கடுக்கான வினாக்களை கேட்டார்.
இந்நிலையில் மசோதாக்களுக்கு ஒப்புதல் பெற இவ்வாறு மறைமுகமாக ரிட் மனுக்களை தாக்கல் அனுமதிப்பது தவறு என மைய அரசு சார்பில் வாதிடப்பட்டது. மேலும் மசோதாக்களை பரிசீலிக்க அவகாசம் தேவை என ஆளுநர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் டிசம்பர் 1ஆம் தேதி வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
முன்னதாக, ஆளுநர் தரப்பில், முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, கே.சி.வீரமணி ஆகியோர் மீதான ஊழல் வழக்குகள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம் என்னும் மசோதா, பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் உட்பட தமிழக அரசின் முக்கிய மசோதாக்களுக்கு அனுமதியளித்துள்ளதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பில் நவம்பர் 13ஆம் தேதியே ஒப்புதல் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. அதில் தமிழ்நாடு அரசே டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்களை நிரப்பும் மசோதா உள்ளிட்ட சிலவற்றை நிலுவையில் வைத்துள்ளார், ஆளுநர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்