Flower Rate Increase:மழை,ஓணம் பண்டிகை எதிரொலி!ரூ. 3 ஆயிரத்தை தொட்ட மல்லி விலை
மதுரையில் மல்லி, முல்லை உள்பட பூக்களின் விலையான கடுமையான விலை உயர்வை சந்தித்துள்ளது. வரத்து குறைவால் விலை உயர்ந்த பூக்களின் விலை தொடர்ந்து நீடிக்கும் எனவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரை மல்லிக்கான மவுசு என்பது ஆண்டுதோறும் இருப்பது மட்டுமில்லாமல் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திராவிலிருந்து இதை வாங்குவோரின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே உள்ளது. புவிசார் குறியீடு பெற்றுள்ள மதுரை மல்லிகைப்பூ விமானம் மூலம் சிங்கப்பூர், மலேசியா உள்பட பல்வேறு வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது.
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் அமைந்துள்ள மலர் வணிக வளாகத்தில் மதுரை மட்டுமில்லாமல், தமிழகம் முழுவதும் பிற பகுதிகளில் இருந்து பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இங்கு வியாபாரிகள் தாங்கள் கொண்டு வரும் பூக்களை மொத்தமாக விற்பனை செய்கிறார்கள்.
அந்த வகையில் மதுரையில் மல்லியின் விலை கிலோவுக்கு ரூ. 2 ஆயிரம் என உச்சத்தை தொட்டுள்ளது. இதேபோல் முல்லை, பிச்சி பூ ஆகியவற்றின் விலையும் ரூ. 800 என உள்ளது. சம்பங்கி பூக்கள், ரோஸ் ரூ. 150, அரளிப்பூ ரூ. 250, செண்டு மல்லி ரூ. 80 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில வாரங்களாகவு தொடர்ந்து பெய்து வரும் மழை, கேரளாவின் ஓணம் பண்டிகையின் தாக்கம் போன்றவற்றால் பூக்களின் வரத்தானது வெகுவாகக் குறைந்திருப்பதாக கூறப்படும் நிலையில், பூக்களின் விலை விர்ரென உயர்ந்திருப்பதாக வியாபாரிகள தெரிவிக்கின்றனர்.
இந்த விலையேற்றமானது இன்னும் சில நாள்கள் வரை நீடிக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.