TN Assembly: சரமாரியாக கேள்வி எழுப்பிய எம்எல்ஏக்கள்.. அசால்டாக பதிலளித்த அமைச்சர்கள்.. பேரவையில் இன்று நடந்தது என்ன?
Tamilnadu Assembly Session 2025: நடப்பாண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் நான்காம் நாள் கூட்டத்தில், உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து பேசியது குறித்தும் சட்டப்பேரவையில் இன்று நடந்தவைகள் குறித்தும் சுருக்கமாக விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

நடப்பாண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் நான்காம் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் வினாக்கள்- விடைகள் நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து பேசியது, குறித்தும் சட்டப்பேரவையில் இன்று நடந்தவைகள் குறித்தும் சுருக்கமாக விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
அமைச்சர் துரைமுருகன் பதில்
குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலளித்து பேசுகையில், "கடந்தாண்டு 89 தடுப்பணைகள் கட்ட அரசாணை வெளியிடப்பட்டு 60 தடுப்பணைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு அதிகமான தடுப்பணைகள் கட்ட வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்" என்றார்.
அமைச்சர் கே.என்.நேரு பதில்
ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கேள்விக்கு அமைச்சர் நேரு பதிலளித்து பேசுகையில், "கழிவு நீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண 946 கோடியில் வட சென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகிறது. ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் 11 கழிவு நீர் அகற்றும் நிலையம்மூலம் அகற்றப்பட்டு வருகிறது. வடசென்னை பகுதியில் கழிவுநீர் குழாய்கள் 40 முதல் 50 ஆண்டுகள் பழமையானதாக உள்ளதால் அதனை மாற்றும் பணி வட சென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெறும். எந்த இடங்களில் உடனடி தேவை என்பதைக் குறிப்பிட்டால் உடனடியாக முன்னுரிமை தந்து பணிகள் முடிக்கப்படும்" என்றார்.