‘அமைச்சர் பேசியது தவறு என்றால்.. பெரியார் பேசியது என்ன?’ திமுகவினரை அலறவிட்ட நிர்மலா சீதாராமன்!
‘‘புதிய கல்விக் கொள்கை உண்மையில் 5 ஆம் வகுப்பு வரை உங்கள் தாய்மொழியில் கற்க வேண்டும் என்று கூறுகிறது, முடிந்தால் 8 ஆம் வகுப்பு வரை இடைநிலை வரை சிறந்தது என்று தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது, ஆனால் அவர்கள் (திமுக) அது இந்தியை திணிப்பதாக கற்பனை செய்கிறார்கள்’’

மும்மொழிக் கொள்கைக்கு திமுக எதிர்ப்புதெரிவித்து வரும் திமுகவினர் குறித்து, பெரியாரின் வார்த்தைகளை வைத்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டினார்.
தமிழக குழந்தைகளின் கல்வி உரிமையை மறுத்த திமுக
மக்களவையில் பேசிய நிர்மலா சீதாராமன், "புதிய கல்விக் கொள்கை உண்மையில் 5 ஆம் வகுப்பு வரை உங்கள் தாய்மொழியில் கற்க வேண்டும் என்று கூறுகிறது, முடிந்தால் 8 ஆம் வகுப்பு வரை இடைநிலை வரை சிறந்தது என்று தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது, ஆனால் அவர்கள் (திமுக) அது இந்தியை திணிப்பதாக கற்பனை செய்ய விரும்புகிறார்கள். தவறாக தமிழகத்தில் குழந்தைகளின் கல்வி உரிமையை மறுத்து அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டனர்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் திங்களன்று கருத்தை ஆதரித்த சீதாராமன், அமைச்சர் "அநேகமாக" திமுகவின் எதிர்ப்பு "நாகரீகமற்றது" என்ற அர்த்தத்ததில் தான் தெளிவுபடுத்தினார். தமிழகத்தில் தனது தனிப்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட நிர்மலா சீதாராமன், ‘‘நீங்கள் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தைக் கற்றுக்கொண்டால், நீங்கள் குறிவைக்கப்படுவீர்கள். திமுகவின் தமிழ் மொழி மீதான பாசம், அன்பு, உணர்வு அனைத்தையும் பிரதான் பேசினார், பின்னர் அவர்கள் எவ்வாறு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தயாராக இருந்தனர் என்பது குறித்து உண்மையை பேசினார், பின்னர் திமுகவினர் மும்மொழி சூத்திரம் எங்களுக்கு ஏற்றதல்ல, ஆனால் நீங்கள் இந்தியை திணிக்கிறீர்கள் என்ற சாக்குப்போக்கில் தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொண்டனர். நான் தமிழ்நாட்டில் வாழ்ந்தேன், அங்கு நீங்கள் இந்தி மற்றும் சமஸ்கிருதம் கற்றுக்கொண்டால், நீங்கள் குறிவைக்கப்படுவீர்கள். அதைவிட முக்கியமாக மாண்புமிகு அமைச்சர் தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினர், ஏனெனில் இது நாகரீகமற்றது என்று அவர் கூறினார். நீங்கள் போராட்டம் நடத்தும் விதம் நாகரீகமற்றது என்று அவர் கூறியிருக்கலாம்.
பெரியார் கருத்துக்களை முன் வைத்த நிதியமைச்சர்
திராவிட இயக்கத் தலைவரின்( பெரியாரின்) பெயரைக் குறிப்பிடாமல் ஒரு பத்திரிகையில் வெளியான ஒரு பழைய பத்தியை மேலும் படித்த நிர்மலா சீதாராமன், ‘‘நீங்கள் தமிழ் கற்றுக்கொண்டால் பிச்சைக்காரனாய் கூட வாழ முடியாது,’’ என்று அவர் கூறியிருக்கிறார். நீங்கள் வேறு எதையாவது கற்றுக் கொண்டால், உங்கள் வாழ்க்கையை வழிநடத்த உங்கள் கையில் அர்த்தமுள்ள ஒன்று இருக்கும் என்று அவர் கூறுயிருப்பதை சுட்டிக் காட்டினார் நிர்மலா சீதாராமன். அவரை பின்பற்றுவதாக பூஜிப்பதாக கூறும் திமுகவினர், அதை மட்டும் ஏற்பார்களா? என்று கேள்வி எழுப்பினார்.
நிர்மலா சீதாராமன் கருத்துக்கு மத்தியில், இந்திய கூட்டணி நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தது.
நிதியமைச்சர் பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம்
நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு காங்கிரஸ் எம்.பி கவுரவ் கோகாய் விமர்சித்தார், "தேர்ந்தெடுக்கப்பட்ட தரவுகளைக் குறிப்பிடுவதன் மூலம் நிதியமைச்சர் தமிழ்நாட்டை மோசமான வெளிச்சத்தில் காட்ட முயன்றார். தேர்ந்தெடுக்கப்பட்ட தரவுகளை முன்னிலைப்படுத்துவதன் மூலம் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை இழிவுபடுத்த மத்திய அமைச்சர்கள் மீண்டும் மீண்டும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன,’’ என்று கூறினார்.
நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு காங்கிரஸ் எம்.பி கே.சி.வேணுகோபால் கண்டனம் தெரிவித்துள்ளார். "இது ஏற்கத்தக்கதல்ல. நேற்று, கல்வி அமைச்சர் அதைச் செய்தார், இன்று, நிதியமைச்சர் அதையே செய்தார்." என்று வேணுகோபால் தெரிவித்தார்.
தர்மேந்திர பிரதான் தெரிவித்த கருத்து என்ன?
மக்களவையில் திங்கள்கிழமை பேசிய தர்மேந்திர பிரதான், தமிழக அரசும், தமிழகத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்களும் பொய்யர்கள், நாகரீகமற்றவர்கள் என்று குற்றம்சாட்டினார்.
தேசிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கையில் தமிழக அரசு கையெழுத்திட்டதன் அடிப்படையில், தமிழக பள்ளிகளுக்கான ரூ.2,000 கோடிக்கு மேல் நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பது குறித்த விவாதத்தின் போது இந்த கருத்து தெரிவிக்கப்பட்டது.
பிரதான் பின்னர் தனது வார்த்தைகளை திரும்பப் பெற்றார், ஆனால் திமுக எம்.பி கனிமொழி, தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களை நோக்கி பயன்படுத்திய 'ஜனநாயக விரோத மற்றும் நாடாளுமன்ற விரோத' வார்த்தைகளை கண்டித்தார். ஆரம்பத்தில் இருந்தே இந்த பிரச்சினையில் மாநில அரசு தங்கள் நிலைப்பாட்டில் கடுமையானதாக இருப்பதாகவும், அதை மாற்றவில்லை என்றும் கனிமொழி கூறினார்.
