தமிழ் செய்திகள்  /  Sports  /  Fifa World Cup 2022: Brazil And Portugal Qualified For Knockout Game

FIFA world cup 2022: நாக்அவுட் சுற்றுக்கு தகுதி பெற்ற பிரேசில், போர்ச்சுகல்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 29, 2022 04:28 PM IST

பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் முன்னணி அணிகளான போர்ச்சுகல், பிரேசில் அணிகள் நாக்அவுட் சுற்று போட்டிகளுக்கு தகுதி பெற்றன. இதுவரை பிரான்ஸ், போர்ச்சுகல், பிரேசில் ஆகிய மூன்று அணிகள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

கோல் அடித்த மகிழ்ச்சியில் பிரேசில் வீரர் காஸ்மிரோ (இடது), போர்ச்சுகல் அணிக்காக கோல் அடித்த ப்ரூனோ பெர்ணான்டஸை பாராட்டும் சக வீரர்
கோல் அடித்த மகிழ்ச்சியில் பிரேசில் வீரர் காஸ்மிரோ (இடது), போர்ச்சுகல் அணிக்காக கோல் அடித்த ப்ரூனோ பெர்ணான்டஸை பாராட்டும் சக வீரர்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தப் போட்டியில் முதல் பாதி ஆட்ட நேரம் வரை இரு அணிகளும் கோல் அடிக்காமல் இருந்தன. இதன்பின்னர் இரண்டாவது பாதியில் இரு அணிகளும் மேற்கொண்ட கோல் அடிக்கும் முயற்சி அனைத்து வீணாகி போனது. ஆட்டம் முடிவதற்கு கிட்டத்தட்ட 7 நிமிடங்கள் இருந்த நிலையில் 83வது நிமிடத்தில் பிரேசில் வீரர் காஸ்மிரோ அற்புதமான கோல் அடித்தார். இதனால் பிரேசில் அணி முன்னிலை பெற்றது.

இதைத்தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் ஆட்டம் முடிவுற்ற நிலையில், கடைசி வரை ஸ்விட்சர்லாந்து அணி கோல் அடிக்கவில்லை. இதனால் பிரேசில் தொடர்ச்சியாக இரண்டாவது வெற்றியை பெற்று நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது. பிரேசில் தனது அடுத்த போட்டியில் கேமரூன் அணியை எதிர்கொள்கிறது.

இதேபோல் ஐரோப்பாவில் பலம் வாய்ந்த அணியாக திகழும் போர்ச்சுகல் உருகுவே அணிக்கு எதிராக 2-0 என வெற்றி பெற்றி, இரண்டு தொடர் வெற்றிகளுடன் நாக்அவுட் சுற்றில் நுழைந்தது.

பிரேசில் ஆட்டத்தை போல் இந்த ஆட்டத்தில் முதல் பாதி வரை இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. ஆனால் இரண்டாம் பாதி தொடங்கி ஆட்டத்தின் 54வது நிமிடத்தில் போர்ச்சுகல் வீர்ர ப்ரூனோ பெர்ணான்டஸ் முதல் கோல் அடித்தார்.

இதைத்தொடர்ந்து ஆட்டம் பரபரப்பாக சென்றபோதிலும் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் கூடுதலாக 3 நிமிடங்கள் தரப்பட்ட நிலையில், ஆட்டம் முடிவதற்கு சில விநாடிகள் முன்னர் தனக்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை பயன்படுத்தி இரண்டாவது கோல் அடித்தார் ப்ரூனோ பெர்ணான்டஸ். தனது குரூப்பில் கானா, உருகுவே அணியை வீழ்த்திய போர்ச்சுகல் அணி அடுத்த போட்டியில் கொரிய அணியுடன் களமிறங்குகிறது.

நாக்அவுட் சுற்றில் 6 புள்ளிகளுடன் முதல் அணியாக நடப்பு சாம்பியன் பிரான்ஸ் உள்ளே நுழைந்தது. இதைத்தொடர்ந்து தற்போது பிரேசில், போர்ச்சுகல் அணிகள் 6 புள்ளிகளை பெற்று தகுதி பெற்றுள்ளன.

தற்போது வரை அனைத்து அணிகளும் இரண்டு போட்டிகள் விளையாடிவிட்ட நிலையில், இன்னும் ஒரு போட்டி மீதம் உள்ளது.

WhatsApp channel

டாபிக்ஸ்