Virudhunagar: நிவாரணம் வேண்டும்.. காப்பீடு கட்டாயம் வேண்டும்’ நரிக்குடியில் திரண்ட விவசாயிகள்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Virudhunagar: நிவாரணம் வேண்டும்.. காப்பீடு கட்டாயம் வேண்டும்’ நரிக்குடியில் திரண்ட விவசாயிகள்!

Virudhunagar: நிவாரணம் வேண்டும்.. காப்பீடு கட்டாயம் வேண்டும்’ நரிக்குடியில் திரண்ட விவசாயிகள்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Published Apr 08, 2025 02:26 PM IST

காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில், விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் இன்று நடந்த ஆர்பாட்டத்திற்கு விவசாயிகள் கூட்டமைப்பு விருதுநகர் மாவட்ட செயலாளர் ஆறு.கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

Virudhunagar: நிவாரணம் வேண்டும்.. காப்பீடு கட்டாயம் வேண்டும்’ நரிக்குடியில் திரண்ட விவசாயிகள்!
Virudhunagar: நிவாரணம் வேண்டும்.. காப்பீடு கட்டாயம் வேண்டும்’ நரிக்குடியில் திரண்ட விவசாயிகள்!

காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில், விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் இன்று நடந்த ஆர்பாட்டத்திற்கு விவசாயிகள் கூட்டமைப்பு விருதுநகர் மாவட்ட செயலாளர் ஆறு.கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

விவசாயிகள் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் எம்.அர்ச்சுணன், மாநில செயலாளர் இராம முருகன், மாநில துணைத் தலைவர் ஆர்.கே.மச்சேஸ்வரன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகளும், விவசாயிகள் கூட்டமைப்பினர் பங்கேற்று, தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.

பருவ மழை பாதிப்பால், விருதுநகர் மாவட்ட விவசாயிகள் சந்தித்துள்ள இழப்பு மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் காப்பீடு வழங்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விவசாயிகள் எடுத்துரைத்தனர். மேலும் இப்பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண, கிருதுமால் நதி பாசனத்திற்கு நிரந்தர ஆயக்கட்டு அமைக்க, அரசு ஆணை வெளியிட வேண்டும் என்கிற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டது. மேலும் இந்த கோரிக்கையை முன்னெடுத்து, தீவிரப்படுத்தவும் விவசாயிகம் முடிவு செய்துள்ளனர்.