Ramanathapuram: அம்பேலான 5000 ஏக்கர்.. சிதைந்து போன கலுங்கு.. தேடிப் படித்த விவசாயிகள்!
‘‘தொடர்ந்து வறட்சியை மட்டுமே சந்தித்து வரும் ராமநாதபுரம் மாவட்டத்தில், இதுபோன்று மடைகள் பயனற்று கிடந்தால் விவசாயம் எப்படி செழிக்கும்,’’

Ramanathapuram: அம்பேலான 5000 ஏக்கர்.. சிதைந்து போன கலுங்கு.. தேடிப் படித்த விவசாயிகள்!
இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் தாலுகா பெருவயல் கிராமத்தில் உள்ள பெருவயல் கண்மாய் (பொதுப்பணித்துறை கண்மாய்) நேரில் கள ஆய்வு செய்யப்பட்டது. இன்று 9-4-2025 காலை காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் எம். அர்ச்சுணன், இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் முகவை மலைச்சாமி, இராமநாதபுரம் வடக்கு ஒன்றியச் செயலாளர் பெருவயல் ராமநாதன் மற்றும் கிராம பெரியவர்கள் இளைஞர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.