Erode East Election Update: ஈரோடு கிழக்கில் களமிறங்கும் விஜய பிரபாகரன்! விசி.சந்திர குமாரை வீழ்த்த வியூகம்!
தேமுதிகவில் இருந்து விலகி வந்த வி.சி.சந்திரகுமாரை திமுக களம் இறக்கி உள்ளது. அவருக்கு போட்டியாக விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனை களமிறக்க ஆலோசனை நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக களமிறங்காவிட்டால், விஜயபிரபாகரனை களமிறக்க தேமுதிக திட்டமிடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று (ஜனவரி 10) தொடங்கிய நிலையில், வரும் ஜனவரி 17ஆம் தேதி உடன் வேட்புமனுத் தாக்கல் முடிவடைகிறது.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜனவரி 18ஆம் தேதி நடைபெறும் நிலையில், ஜனவரி 20ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அடுத்து வரும் பிப்ரவரி 5ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் பிப்ரவரி 8ஆம் தேதி அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
வி.சி.சந்திர குமார் போட்டி
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவே நேரடியாக போட்டியிடும் என்று காங்கிரஸ் கட்சி நேற்று அறிவித்த நிலையில், திமுக வேட்பாளாராக வி.சி.சந்திரகுமாரை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார்.
இதனிடையே இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து அதிமுக முக்கிய நிர்வாகிகள் உடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை செய்கிறார். இதற்கு முன்பு நடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் புறக்கணித்து இருந்தன.
சந்திரக்குமாருக்கு போட்டியாக விஜயபிரபாகரன்!
தேமுதிகவில் இருந்து விலகி வந்த வி.சி.சந்திரகுமாரை திமுக களம் இறக்கி உள்ளது. அவருக்கு போட்டியாக விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனை களமிறக்க ஆலோசனை நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்