ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவு: எகிறும் நாம் தமிழர் வாக்குகள்! டெபாசிட் வாங்குமா? இதோ முழு விவரம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவு: எகிறும் நாம் தமிழர் வாக்குகள்! டெபாசிட் வாங்குமா? இதோ முழு விவரம்!

ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவு: எகிறும் நாம் தமிழர் வாக்குகள்! டெபாசிட் வாங்குமா? இதோ முழு விவரம்!

Kathiravan V HT Tamil
Published Feb 08, 2025 02:09 PM IST

Erode East Election Results: ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 433 வாக்காளர்கள் உள்ளனர். இடைத்தேர்தல் அன்று 67.97 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. டெபாசிட் பெற நாம் தமிழர் கட்சி 26 ஆயிரம் வாக்குகளை பெற வேண்டும் என்பது விதியாக உள்ளது.

ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவு: எகிறும் நாம் தமிழர் வாக்குகள்! டெபாசிட் வாங்குமா? இதோ முழு விவரம்!
ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவு: எகிறும் நாம் தமிழர் வாக்குகள்! டெபாசிட் வாங்குமா? இதோ முழு விவரம்!

ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி அன்று ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகின. 44 சுயேச்சைகள் உட்பட 46 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். திமுகவின் வி.சி.சந்திரகுமார் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எம்.கே.சீதாலட்சுமி இடையே நேரடி போட்டி இருந்தது.

வாக்கு எண்ணும் பணிகள் தீவிரம்

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் பெருந்துறை அரசு பொறியியல் கல்லூரியில் எண்ணப்பட்டு வருகின்றது. மொத்தம் 14 மேசைகளில் வாக்கு எண்ணும் பணியில் 51 பேர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான நூற்றுக்கணகான போலீசார் பாதுகாப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

தொடக்கத்தில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிந்த நிலையில், தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதுவரை 10 சுற்று வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு உள்ளன.  பிற்பகல் 1.30 மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் சந்திரகுமார் 63, 984 வாக்குகளை பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 13, 945 வாக்குகளை பெற்றுள்ளார். நோட்டாவுக்கு 2,940 பேர் வாக்களித்து உள்ளனர்.

டெபாசிட் பெருமா நாம் தமிழர்?

ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 433 வாக்காளர்கள் உள்ளனர். இடைத்தேர்தல் அன்று 67.97 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. டெபாசிட் பெற நாம் தமிழர் கட்சி 26 ஆயிரம் வாக்குகளை பெற வேண்டும் என்பது விதியாக உள்ளது. 

17 சுற்றுகளாக பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், 9ஆம் சுற்று நிலவரப்படி 13,437 வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்று உள்ளது. டெபாசிட் பெற மீதமுள்ள 8 சுற்றுகளில் 12,563 வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. சரசரியாக ஒவ்வொரு சுற்றுக்கும் 1571 வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற வேண்டியது முக்கியம்.  

ஈரோடு கிழக்கு தொகுதியும் இடைத்தேர்தல்களும்!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர், முன்னாள் மத்திய இணையமைச்சராகவும் இருந்து வந்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். இவரது மகன் திருமகன் ஈவேரா, ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்தார். அவரது திடீர் மறைவை தொடந்து, கடந்த ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது.

இதில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன், ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 156 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43 ஆயிரத்து 923 வாக்குகளையும், நாம் தமிழர் வேட்பாளர் மேனகா நவநீதன் 10 ஆயிரத்து 827 வாக்குகளையும் பெற்று இருந்தனர்.

ஈவிகேஎஸ் இளங்கோவனின் மரணம்

வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிச்சை பெற்று உடல்நலம் தேறினார். இந்த நிலையில் மீண்டும் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில் டிசம்பர் 14ஆம் தேதி காலமானார். இதை அடுத்து கடந்த டிசம்பர் 17ஆம் தேதி அன்று ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.