Erode East By-Election: ஈரோடு கிழக்கில் இடைத் தேர்தல் எப்போது? தேதியை இன்று அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்!
Erode East By-Election: தமிழ்நாடு சட்டப்பேரவை தொடர் ஆளுநர் உரைக்காக நேற்று தொங்கி உள்ளது. இரண்டாம் நாளான இன்று மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நாள் முழுவதும் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
Erode East By-Election: ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர், முன்னாள் மத்திய இணையமைச்சராகவும் இருந்து வந்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். இவரது மகன் திருமகன் ஈவேரா, ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்தார். அவரது திடீர் மறைவை தொடந்து, கடந்த ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது.
இதில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன், ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 156 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43 ஆயிரத்து 923 வாக்குகளையும், நாம் தமிழர் வேட்பாளர் மேனகா நவநீதன் 10 ஆயிரத்து 827 வாக்குகளையும் பெற்று இருந்தனர்.
ஈவிகேஎஸ் இளங்கோவனின் மரணம்
வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிச்சை பெற்று உடல்நலம் தேறினார். இந்த நிலையில் மீண்டும் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில் டிசம்பர் 14ஆம் தேதி காலமானார்.
இதை அடுத்து கடந்த டிசம்பர் 17ஆம் தேதி அன்று ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்தது.
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்க உள்ளது. இதே வேளையில் நாடு முழுவதும் இடைத்தேர்தல் நடத்த உள்ள தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுவதற்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து வரும் பிப்ரவரி மாதம் டெல்லி யூனியன் பிரதேசத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதே மாதத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இரங்கல்
தமிழ்நாடு சட்டப்பேரவை தொடர் ஆளுநர் உரைக்காக நேற்று தொங்கி உள்ளது. இரண்டாம் நாளான இன்று மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நாள் முழுவதும் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.