Erode East Bypoll: என் vote எங்க?.. எனக்கு பதிலா வேற யாரோ Vote போட்டுட்டாங்க.. ஈரோட்டில் பெண் வாக்காளர் பரபரப்பு புகார்!
Erode East Bypoll: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தன்னுடைய வாக்கை வேறொருவர் செலுத்தியதாக பரிதா பேகம் என்ற பெண் புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Erode East Bypoll 2025: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (பிப்ரவரி 05) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் சூழலில், தன்னுடைய வாக்கை வேறொருவர் செலுத்தியதாக பரிதா பேகம் என்ற பெண் ஒருவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக தேர்தல் அலுவலர்களிடம் தான் முறையிட்ட போது அதிகாரிகள் ஒழுங்கா பதில் சொல்லவில்லை என அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார். என்னுடைய கையில் தான் வாக்காளர் அடையாள அட்டை உள்ளது. ஆனால், என்னுடைய வாக்கு ஏற்கனவே செலுத்தப்பட்டதாக கூறுகிறார்கள் என்றும் தனக்கு வாக்குரிமையை கொடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் பெண் ஒருவர் இவ்வாறு புகார் அளித்தது ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து, இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலை பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக, தேமுதிக, விஜயின் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன. இண்டியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் சீதாலட்சுமி வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர்கள் உட்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
237 வாக்குச்சாவடி மையங்கள்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. இடைத்தேர்தலில் 2,27,237 பேர் வாக்களிப்பதற்காக 53 இடங்களில் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 9 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு நிலவரம்
காலை 9 மணி நிலவரப்படி 10.95 சதவீதமாக இருந்த வாக்கு சதவீதம், 11 மணி நிலவரப்படி 26.03 சதவீதமாக ஆக இருந்தது. இந்நிலையில், பிற்பகல் 1 மணி நிலவரப்படி அங்கு 42.41 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், தன்னுடைய வாக்கை வேறொருவர் செலுத்தியதாக பரிதா பேகம் என்ற பெண் புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாக்களிக்க வந்த பெண் அளித்த பேட்டி இதோ..!

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்