Erode East Bypolls : ‘ஈரோடு இடைத்தேர்தல்.. திமுகவுக்கு வழிவிட்டு ஒதுங்கிய காங்கிரஸ்..’ வேட்பாளர் யார்?
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Erode East Bypolls : ‘ஈரோடு இடைத்தேர்தல்.. திமுகவுக்கு வழிவிட்டு ஒதுங்கிய காங்கிரஸ்..’ வேட்பாளர் யார்?

Erode East Bypolls : ‘ஈரோடு இடைத்தேர்தல்.. திமுகவுக்கு வழிவிட்டு ஒதுங்கிய காங்கிரஸ்..’ வேட்பாளர் யார்?

Stalin Navaneethakrishnan HT Tamil
Jan 10, 2025 11:40 PM IST

Erode East Bypolls : ‘இந்தியா கூட்டணியின் தமிழ்நாட்டின் தலைவராக விளங்கி கொண்டிருக்கும் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், முதல் முறையாக கேட்டுக்கொண்டதற்கு இணங்க அகில இந்திய காங்கிரஸ் தலைமை மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையின் தீவிர ஆலோசனைக்கு பிறகு நாங்கள் அனைவரும் ஒரு மனதாக..’

Erode East Bypoll : ‘ஈரோடு இடைத்தேர்தல்.. திமுகவுக்கு வழிவிட்டு ஒதுங்கிய காங்கிரஸ்..’ வேட்பாளர் யார்?
Erode East Bypoll : ‘ஈரோடு இடைத்தேர்தல்.. திமுகவுக்கு வழிவிட்டு ஒதுங்கிய காங்கிரஸ்..’ வேட்பாளர் யார்?

ஒதுங்கிக் கொண்ட காங்கிரஸ்

‘‘ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி இடை தேர்தல் வரவிருப்பதை நாம் அனைவரும் அறிவோம், இந்த தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் மறைவு அடைந்ததையோட்டி இடை தேர்தல் வரவிருக்கிறது.

2026 சட்டமன்ற பொது தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், மாண்புமிகு முதல் அமைச்சர் மற்றும் இந்தியா கூட்டணியின் தமிழ்நாட்டின் தலைவராக விளங்கி கொண்டிருக்கும் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், முதல் முறையாக கேட்டுக்கொண்டதற்கு இணங்க அகில இந்திய காங்கிரஸ் தலைமை மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையின் தீவிர ஆலோசனைக்கு பிறகு நாங்கள் அனைவரும் ஒரு மனதாக ஏற்றுக்கொண்டு இந்திய கூட்டணியின் சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதியின் இடை தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் போட்டியிடுவார் என்று இன்று உறுதிசெய்யப்பட்டது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க நாட்டில் ஜனநாயகம் மலரச்செய்ய நாம் அனைவரும் ஒன்றினைந்து இந்திய கூட்டணியின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம்,’’

என்று அந்த பதிவில் செல்வப் பெருந்தகை விளக்கம் தெரிவித்துள்ளார்.

ஈரோடு இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பு

வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த அறிவிப்பில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வேட்புமனுத்தாக்கல் வரும் ஜனவரி 10ஆம் தேதி தொடங்குகிறது. ஜனவரி 17ஆம் தேதி அன்று வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜனவரி 18ஆம் தேதி நடைபெறும் நிலையில், ஜனவரி 20ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அடுத்து வரும் பிப்ரவரி 5ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் பிப்ரவரி 8ஆம் தேதி அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியும் இடைத்தேர்தல்களும்!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர், முன்னாள் மத்திய இணையமைச்சராகவும் இருந்து வந்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். இவரது மகன் திருமகன் ஈவேரா, ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்தார். அவரது திடீர் மறைவை தொடந்து, கடந்த ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது.

இதில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன், ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 156 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43 ஆயிரத்து 923 வாக்குகளையும், நாம் தமிழர் வேட்பாளர் மேனகா நவநீதன் 10 ஆயிரத்து 827 வாக்குகளையும் பெற்று இருந்தனர்.

ஈவிகேஎஸ் இளங்கோவனின் மரணம்

வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிச்சை பெற்று உடல்நலம் தேறினார். இந்த நிலையில் மீண்டும் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில் டிசம்பர் 14ஆம் தேதி காலமானார். இதை அடுத்து கடந்த டிசம்பர் 17ஆம் தேதி அன்று ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்தது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.