Erode East By Election: ஈரோடு கிழக்கில் திமுக, நாதக உட்பட 55 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு! 5 பேரின் மனு ரிஜக்ட்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Erode East By Election: ஈரோடு கிழக்கில் திமுக, நாதக உட்பட 55 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு! 5 பேரின் மனு ரிஜக்ட்!

Erode East By Election: ஈரோடு கிழக்கில் திமுக, நாதக உட்பட 55 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு! 5 பேரின் மனு ரிஜக்ட்!

Kathiravan V HT Tamil
Jan 18, 2025 04:41 PM IST

ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு காரணமாக அத்தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இத்தேர்தலை பிரதான எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்து உள்ளன.

Erode East By Election: ஈரோடு கிழக்கில் திமுக, நாதக உட்பட 55 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு! 5 பேரின் மனு ரிஜக்ட்!
Erode East By Election: ஈரோடு கிழக்கில் திமுக, நாதக உட்பட 55 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு! 5 பேரின் மனு ரிஜக்ட்!

ஈரோடு கிழக்கு தொகுதி!

ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு காரணமாக அத்தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இத்தேர்தலை பிரதான எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்து உள்ளன. 

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி வாக்குப்பதிவும், பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த ஜனவரி 17ஆம் தேதி அன்று தொடங்கியது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்று முடிந்து உள்ளது. 

திமுக சார்பில் சந்திரக்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி உட்பட 55 சுயேச்சை வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு உள்ளன. 5 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. தாக்கல் செய்த வேட்புமனுக்களை திரும்ப பெற ஜனவரி 20ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் மாலையே இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட உள்ளது. 

ஈரோடு கிழக்கு தொகுதியும் இடைத்தேர்தல்களும்!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர், முன்னாள் மத்திய இணையமைச்சராகவும் இருந்து வந்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். இவரது மகன் திருமகன் ஈவேரா, ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்தார். அவரது திடீர் மறைவை தொடந்து, கடந்த ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது.

இதில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன், ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 156 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43 ஆயிரத்து 923 வாக்குகளையும், நாம் தமிழர் வேட்பாளர் மேனகா நவநீதன் 10 ஆயிரத்து 827 வாக்குகளையும் பெற்று இருந்தனர்.

ஈவிகேஎஸ் இளங்கோவனின் மரணம்

வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிச்சை பெற்று உடல்நலம் தேறினார். இந்த நிலையில் மீண்டும் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில் டிசம்பர் 14ஆம் தேதி காலமானார். இதை அடுத்து கடந்த டிசம்பர் 17ஆம் தேதி அன்று ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.