Erode East ByElection: ஈரோடு இடைத்தேர்தல்!அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செந்தில் முருகன் திமுகவில் ஐக்கியம்!
ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு காரணமாக அத்தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இத்தேர்தலை பிரதான எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்து உள்ளன.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்ததால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செந்தில் முருகன் திமுகவில் இணைந்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி!
ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு காரணமாக அத்தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இத்தேர்தலை பிரதான எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்து உள்ளன.
ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி வாக்குப்பதிவும், பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த ஜனவரி 17ஆம் தேதி தொடங்கி நிறைவு பெற்று உள்ளது.