தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Eps Talks That There Is No Alliance With Bjp

EPS: ’பாஜக உடன் கூட்டணி இல்லை!’ அமித் ஷாவுக்கு ஈபிஎஸ் பதில்!

Kathiravan V HT Tamil
Feb 11, 2024 01:57 PM IST

”திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் உள்ளது என்பது இன்னும் 10 நாட்களில் தெரிய வரும் என ஈபிஎஸ் கூறி உள்ளார்”

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - உள்துறை அமைச்சர் அமித் ஷா- கோப்புப்படம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - உள்துறை அமைச்சர் அமித் ஷா- கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி அன்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தினத்தந்தி நாளேட்டுக்கு அளித்துள்ள பேட்டியில், அதிமுகவுக்காக கூட்டணி கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என தெரிவித்து இருந்தார். 

அமித்ஷாவின் இந்த கருத்து தமிழ்நாடு அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருந்தது. உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டி குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறுகையில், பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என்பதுதான் தொண்டர்கள் மற்றும் மக்களின் நிலைப்பாடு என அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்து இருந்தார். 

இந்த நிலையில், கிருஷ்ணகிரியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக உடன் மறைமுக கூட்டணி வைத்துள்ளதாக கூறுகிறார்கள். நான் ஏற்கனவே பலமுறை கூறிவிட்டேன். அதிமுகவை பொறுத்தவரை ஏற்கெனவே கடந்த 25.9.2023 அன்று அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் பாஜகவோடோ அல்லது தேசிய ஜனநாயக கூட்டணியிலோ அதிமுக இல்லை என சொல்லிவிட்டோம். ஆனால் கடந்த 5 மாதமாக ஊடகங்களில் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் தவறான செய்தியை வெளியிட்டுக் கொண்டுள்ளார்கள். 

இறுதியாக சொல்கிறோம், உறுதியாக சொல்கிறோம் அதிமுக பாஜக கூட்டணியில் இல்லை. இனி ஊடக நண்பர்கள் இது தொடர்பான கேள்வியை எழுப்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். 

எந்த நேரத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்க வேண்டுமோ அந்த நேரத்தில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் உள்ளது என்பது இன்னும் 10 நாட்களில் தெரிய வரும் என ஈபிஎஸ் கூறி உள்ளார். 

WhatsApp channel