Tamil News  /  Tamilnadu  /  Eps Talks About Parliamentary Election Alliance In Aiadmk District Secretaries Meeting

EPS: ’இன்னும் 100 நாள் தான்!’ கூட்டணியை நான் பாத்துகுறேன்! மா.செக்கள் கூட்டத்தில் ஈபிஎஸ் ஓபன் டாக்!

Kathiravan V HT Tamil
Jan 09, 2024 12:53 PM IST

”AIADMK district secretaries meet: இன்று மாலை 5 மணி வரை அனைத்து மாவட்ட செயலாளர்களும் சென்னையிலேயே இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. தொகுதி வாரியாக யாரை நிறுத்தினால் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்பதை நேரடியாக அவரது இல்லத்திற்கு அழைத்து ஈபிஎஸ் பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது”

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

ட்ரெண்டிங் செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தேர்தல் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். 

இன்னும் 100 நாட்களுக்குள் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. 

இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் மத்தியில் பேசி உள்ள எடப்பாடி பழனிசாமி,  தேர்தலில் வெற்றி பெற சாத்தியக்கூறுகள் உள்ள வேட்பாளர்கள் குறித்த விவரங்களை ஆய்வு செய்து தயாராக வைத்திருக்கும்படியும், கூட்டணி இறுதியான பிறகு வேட்பாளர் தேர்வு குறித்து பரிசீலக்கலாம் என கூறி உள்ளார். 

இன்று மாலை 5 மணி வரை அனைத்து மாவட்ட செயலாளர்களும் சென்னையிலேயே இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. தொகுதி வாரியாக யாரை நிறுத்தினால் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்பதை நேரடியாக அவரது இல்லத்திற்கு அழைத்து ஈபிஎஸ் பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கூட்டணியை பொறுத்தவரை யாரும் கவலைப்பட வேண்டாம், நான் பார்த்துக் கொள்கிறேன், தேர்தல் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள் என ஈபிஎஸ் அறிவுரை கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.  

WhatsApp channel