தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Eps Has No Right To Ask Stalin To Resign - Ttv Dhinakaran Interview

TTV Vs EPS: 'ஸ்டாலினை ராஜினாமா செய்ய சொல்ல ஈபிஎஸ்க்கு அருகதை இல்லை’ டிடிவி தினகரன்

Kathiravan V HT Tamil
May 16, 2023 10:34 PM IST

நாங்கள் இருவரும் சுயலாபத்திற்காக இணையவில்லை, பன்னீர் செல்வம் தலைமையிலான நிர்வாகிகள் தொண்டர்களோடு அம்மாவின் இயக்கத்தை மீட்டெடுப்போம்T

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்  -கோப்புபடம்
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் -கோப்புபடம்

ட்ரெண்டிங் செய்திகள்

ஸ்டெர்லைட் விவகாரத்தில் மக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட போது காவல்துறையை கையில் வைத்திருந்த பழனிசாமி பதவி விலகி இருந்தால் இன்றைக்கு முதலமைச்சரை பார்த்து பதவி விலகக்கேட்கும் அருகதை இருந்திருக்கும்.

காவல்துறையின் மெத்தன போக்கால் மக்கள் உயிரிழந்துள்ளார்கள். போதை கலாச்சாரத்தால் மாணவர்கள் உட்பட பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பன்னீர் செல்வம் அவர்கள்தான் செப்டம்பர் 12, 2017 பொதுக்குழு தீர்மானத்தின் படி ஒருங்கிணைப்பாளராக ஏற்றுக்கொண்டுள்ளனர். அவரை கட்சியை விட்டு நீக்குவேன் என்று தனது பணபலத்தால் நிர்வாகிகளை கைக்குள் போட்டுவிட்டு பழனிசாமி கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்தார். அதற்கு எதிராக பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கு இன்னும் நடந்து வருகிறது.

வடதமிழக மக்களை 10.5% இட ஒதுக்கீடு கொடுப்பதாக கூறி ஏமாற்றியதுபோல் கட்சிக்காரர்களையும் ஈபிஎஸ் ஏமாற்றி உள்ளார். இறுதியாக நீதிமன்ற வழக்கில் பன்னீர் செல்வம்தான் வெற்றி பெறுவார். ஈபிஎஸின் பணபலத்தையும், ஆணவத்தையும் நாங்கள் அடக்கி காட்டுவோம்.

எனது வேண்டுகோளின் அடிப்படையில்தான் பன்னீர் செல்வம் தனது முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.

நாங்கள் இருவரும் சுயலாபத்திற்காக இணையவில்லை, பன்னீர் செல்வம் தலைமையிலான நிர்வாகிகள் தொண்டர்களோடு அம்மாவின் இயக்கத்தை மீட்டெடுப்போம்.

பன்னீர் செல்வமும் நானும் அரசியல் ரீதியாகத்தான் விமர்சனம் செய்திருந்தோம் ஆனால் நாயே பேயே என்று கூறி பழனிசாமி போல் தரம்தாழ்ந்து விமர்சனம் செய்யக்கூடியவன் நான் அல்ல என டிடிவி தினகரன் கூறினார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்