டாஸ்மாக் முறைகேடு: ’ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் என்றால் ஒரு வருஷத்துக்கு 5400 கோடி!’ புள்ளி விவரத்துடன் விளாசிய ஈபிஎஸ்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  டாஸ்மாக் முறைகேடு: ’ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் என்றால் ஒரு வருஷத்துக்கு 5400 கோடி!’ புள்ளி விவரத்துடன் விளாசிய ஈபிஎஸ்

டாஸ்மாக் முறைகேடு: ’ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் என்றால் ஒரு வருஷத்துக்கு 5400 கோடி!’ புள்ளி விவரத்துடன் விளாசிய ஈபிஎஸ்

Kathiravan V HT Tamil
Published Apr 22, 2025 01:12 PM IST

ரூ.1,000 கோடி முறைகேடு நடந்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதுகுறித்து முதலமைச்சரோ, சம்பந்தப்பட்ட அமைச்சரோ எந்த விளக்கமும் அளிக்கவில்லை," என்று ஈபிஎஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

டாஸ்மாக் முறைகேடு: ’ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் என்றால் ஒரு வருஷத்துக்கு 5400 கோடி!’ புள்ளி விவரத்துடன் விளாசிய ஈபிஎஸ்
டாஸ்மாக் முறைகேடு: ’ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் என்றால் ஒரு வருஷத்துக்கு 5400 கோடி!’ புள்ளி விவரத்துடன் விளாசிய ஈபிஎஸ்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் டாஸ்மாக் முறைகேடு குறித்து பேச வாய்ப்பு மறுக்கப்படுவதாக கூறி அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அமலாக்கத்துறை சோதனையும் முறைகேடு குற்றச்சாட்டும்

டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சட்டப்பேரவையில் இவ்விவகாரத்தை எழுப்ப முயன்றபோது, பேச்சுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், இது ஜனநாயகப் படுகொலை எனவும் அவர் கடுமையாக விமர்சித்தார். "அமலாக்கத்துறை டாஸ்மாக் தலைமை அலுவலகம், பிற அலுவலகங்கள் மற்றும் மதுபான ஆலைகளில் சோதனை நடத்தியது. இதில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதுகுறித்து முதலமைச்சரோ, சம்பந்தப்பட்ட அமைச்சரோ எந்த விளக்கமும் அளிக்கவில்லை," என்று ஈபிஎஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் அனுமதி மறுப்பு

சட்டப்பேரவையில் டாஸ்மாக் முறைகேடு குறித்து விவாதிக்க வாய்ப்பு கோரியதாகவும், ஆனால் சபாநாயகர் திட்டவட்டமாக அனுமதி மறுத்ததாகவும் அவர் கூறினார். "இதை அரசின் கவனத்திற்கு கொண்டுவருவதில் என்ன தவறு? சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டால், இந்த முறைகேடு நிரூபணமாகிறது. அரசு பதில் அளித்திருந்தால், மக்களுக்கு உண்மை தெரிந்திருக்கும்," என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.

ஊழல் கணக்கீடு மற்றும் குற்றச்சாட்டுகள்

டாஸ்மாக் மதுபானக் கடைகளில் ஒரு பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுவதாகவும், இதன் மூலம் ஒரு நாளைக்கு ரூ.15 கோடி, மாதத்திற்கு ரூ.450 கோடி, ஆண்டுக்கு ரூ.5,400 கோடி ஊழல் நடப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். "ஒரு நாளைக்கு ஒரு கோடி பாட்டில்கள் விற்கப்படுகின்றன. இதில் ரூ.10 வசூல் செய்தால், ஆண்டுக்கு ரூ.5,500 கோடி ஊழல் நடந்திருப்பது தெரியவருகிறது," என்று அவர் விளக்கினார்.

டாஸ்மாக் ஊழியர்களின் ஒப்புதல்

மேலும், டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தின்போது, இந்த வசூலை உயர் அதிகாரிகளுக்கும் அமைச்சருக்கும் அளித்ததாக ஒப்புக்கொண்டதாக கூறியதை ஊடகங்கள் வெளியிட்டு உள்ளதாகவும் ஈ.பி.எஸ். குறிப்பிட்டார். "இவையெல்லாம் சட்டப்பேரவையில் பேச வாய்ப்பு மறுக்கப்பட்டது. இது ஜனநாயகப் படுகொலை. மக்களின் பிரச்சனைகளைப் பேசுவது எங்கள் கடமை, பதில் சொல்வது அரசின் கடமை," என்று அவர் கண்டனம் தெரிவித்தார்.

நேரக் கட்டுப்பாடு மற்றும் வெளிநடப்பு

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தை எழுப்ப முயன்ற அதிமுக உறுப்பினர்களுக்கு போதிய நேரம் வழங்கப்படவில்லை என்றும், 10 நிமிடங்களில் இத்தகைய பெரிய பிரச்சனையை எப்படி விவாதிக்க முடியும் என்றும் ஈபிஎஸ். கேள்வி எழுப்பினார். இதனையடுத்து, அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.