கிழித்து போடப்பட்ட வாட்சப் சாட்! டாஸ்மாக் இயக்குநர் விசாகனை அழைத்து சென்ற ED
இதனைத் தொடர்ந்து, விசாகனை விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1000 கோடி முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், இந்த சோதனை நடைபெற்றது.

கிழித்து போடப்பட்ட வாட்சப் சாட்! டாஸ்மாக் இயக்குநர் விசாகனை அழைத்து சென்ற ED
டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனை வீட்டில் இருந்து அழைத்து சென்று அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு உள்ளது.
மணப்பாக்கத்தில் ரெய்டு
டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனின் மணப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் இன்று (மே 16, 2025) காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையின்போது, விசாகனின் வீட்டருகே வாட்ஸ்அப் உரையாடல் நகல்கள் கிழிக்கப்பட்ட நிலையில் கிடந்ததை அதிகாரிகள் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து, விசாகனை விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1000 கோடி முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், இந்த சோதனை நடைபெற்றது.