தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ed: விவசாயிக்கு நோட்டீஸ் அனுப்பிய Ed! வழக்கை கைவிட முடிவு

ED: விவசாயிக்கு நோட்டீஸ் அனுப்பிய ED! வழக்கை கைவிட முடிவு

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 04, 2024 11:47 AM IST

அமலாக்கத் துறை அனுப்பிய கடிதத்தில் என்று சாதியின் பெயரைக் குறிப்பிட்டு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

விவசாயிக்கு நோட்டீஸ் அனுப்பிய ED! வழக்கை கைவிட முடிவு
விவசாயிக்கு நோட்டீஸ் அனுப்பிய ED! வழக்கை கைவிட முடிவு

ட்ரெண்டிங் செய்திகள்

சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, ராமநாயக்கன் பாளையம் 10 ஏக்கர் காலனி வடக்கு காடு என்று அழைக்கப்படக்கூடிய காராமணி பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட விவசாயி சின்னையன் என்ற சின்னச்சாமி என்பவரது புதல்வர்கள் கண்ணையன், கிருஷ்ணன் ஆவர். காலமான சின்ன சாமி அவர்களால் விலைக்கு வாங்கப்பட்ட 6 ½ ஏக்கர் நிலத்தில் அவரது புதல்வர்கள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் விவசாயம் செய்து வந்துள்ளனர். 

கண்ணையன் திருமணமானவர்; அவருக்குக் குழந்தைகள் எவரும் இல்லை. கிருஷ்ணனுக்கு இரண்டு ஆண், இரண்டு பெண் குழந்தைகள் உண்டு; ஒருவர் மும்பையில் இருக்கிறார்; மற்றொருவர் சேலம் அருகே இரைச்சிபாளையத்தில் வசித்து வருகிறார்; மற்ற இரண்டு பெண்களுக்கும் திருமணம் ஆகி விட்டது. கிருஷ்ணன், கண்ணையன் ஆகிய இருவரும் 70 வயதிற்கு மேற்பட்டவர் என்பதாலும், வேறு எவரும் அவர்கள் குடும்பத்தில் அந்த நிலத்தில் நேரடியாக விவசாயத்தில் ஈடுபடாததாலும் இவர்களுடைய நிலத்திற்கு அருகாமையில் இருக்கும் சேலம் இரும்பாலை பகுதியிலிருந்து குடியேறிய குணசேகரன் என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்தது. இந்நிலையில் கடந்த ஜீன்மாதம் விவசாயிகளுக்கு சென்னை அமலாக்கத் துறை அலுவலகத்திலிருந்து ஆஜராகும்படி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் இருவரும் காட்டருமையை கொன்று புதைத்ததாக வனத்துறை ஏற்கனவே வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் தான் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. அதுமட்டுமின்றி வனத்துறை பதிவு செய்த தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெயரைத் தான் அமலாக்கத்துறை பயன்படுத்தி இருக்கிறது என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

ஆனால் அமலாக்கத் துறை அனுப்பிய கடிதத்தில் என்று சாதியின் பெயரைக் குறிப்பிட்டு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கு பல தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் சேலம் விவசாயிகள் மீதான வழக்கை கைவிட அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்