Senthil Balaji Vs ED: ’செந்தில் பாலாஜியை கைது செய்தது ஏன்?’ அமலாக்கத்துறை பதில் மனுவில் புதிய தகவல்!
”செந்தில் பாலாஜி கைது செய்யப்படுவதற்கு முன்பாக அவரை சட்டவிரோதமாக சிறைப்பிடிக்கவில்லை என்றும் அவரது கைது நியாமானது” அமலாக்கத்துறை

அமைச்சர் செந்தில் பாலாஜி - அமலாக்கத்துறை
அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக சிறைப்பிடிக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
அமலாக்கத்துறையால் கடந்த 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலிலேயே மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் கைது சட்டவிரோதமானது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் அவர் மீதான கைது உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவின் மீதான விசாரணை வரும் 27ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.