Bus Strike: வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும் - போக்குவரத்து துறை உத்தரவு
ஊழியர்கள் பணி விடுப்பு, மாற்று விடுப்பு, ஈட்டிய விடுப்பு என அனைத்து விதமான விடுப்புகளையும் தவிர்த்து, பணிக்கு வந்து சீரான பேருந்து இயக்கம் அமைய உதவ வேண்டும் என போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு ஆஜராக வேண்டும் என தமிழ்நாடு போக்குவரத்து துறை வலியுறுத்தியுள்ளது. போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதாக அமையும். அனைத்து பணியாளர்களும் பணி விடுப்பு, மாற்று விடுப்பு, ஈட்டிய விடுப்புகளை தவிர்த்து பணிக்கு வர வேண்டுகோள் விடுத்துள்ளனர். அனைத்து விடுப்புகளையும் தவிர்த்து பணிக்கு ஆஜராகி சீரான பேருந்து போக்குவரத்து நடைபெறுவதை உறுதிசெய்ய வேண்டுகோள் விடுத்துள்ளது.
முன்னதாக 15-ஆம் ஊதிய ஒப்பந்தப் பேச்சுகளை உடனே தொடங்க வேண்டும்; ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 முக்கியக் கோரிக்கைகள் தொடர்பாக போக்குவரத்துக் கழகங்கத்துடன் இணைந்து முத்தரப்பு பேச்சு வார்த்தை சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நடந்தது. இதில் தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் ரமேஷ், அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் இளங்கோ மற்றும் சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட சங்கம் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஆனால் தொழிலாளர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. ‘
இந்நிலையில் சென்னையில் நடந்த முத்தரப்
தோல்வியடைந்து விட்டது. இந்நிலையில் வரும் 9-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இந்நிலையில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு வர வேண்டும் என போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு வர வேண்டும்
-வேலை நிறுத்தம் செய்வது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும்.
-ஊழியர்கள் பணி விடுப்பு, மாற்று விடுப்பு, ஈட்டிய விடுப்பு என அனைத்து விதமான விடுப்புகளையும் தவிர்த்து, பணிக்கு வந்து சீரான பேருந்து இயக்கம் அமைய உதவ வேண்டும்.
-சேம மற்றும் தினக்கூலி பணியாளர்கள் கட்டாயமாக பணிபுரிய வேண்டும் என அறிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்