‘செங்கோட்டையனை பேச விடுங்க..’ சபாநாயகரிடம் சீறிய எடப்பாடி பழனிசாமி.. ஒரே நாளில் மாறிய காட்சிகள்!
சட்டமன்ற பட்ஜெட் மீதான விவாதத்தில், செங்கோட்டையனுக்கு வாய்ப்பு வழங்குமாறு, சபாநாயகரிடம் எடப்பாடி பழனிசாமி ஆதரவு தெரிவித்த சம்பவம், அவர்களை சுற்றி நிகழ்ந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தின் மீது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார். பள்ளிக் கல்வித்துறைக்கு போதிய நிதி ஒதுக்கப்படுவதில்லை என்றும், வகுப்பறைகள் கட்டுவதற்கு நிதி போதுமா என்றும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் பதிலளித்தனர். குறிப்பாக, அன்பில் மகேஷ் பேசும் போது, ‘கடந்த ஆட்சியில் தான் போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்றும், திமுக ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டு வருவதாகவும். இதுவரை 7 ஆயிரம் வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாகவும், இன்னும் கூடுதல் வகுப்பறைகள் கட்ட அதிக நிதி ஒதுக்கி வருவதாகவும், அதிமுக ஆட்சியில் புதிதாக எதுவும் செய்யவில்லை என்றும், பள்ளி கல்வித்துறையில் அதிமுக விட்டுச் சென்ற பல பணிகளை நாங்கள் தான் செய்தோம் என்றும், அறிவித்து தொடங்காத பணிகளை கூட நாங்கள் தான் செய்தோம்’ என்று அன்பில் மகேஷ் பதிலளித்தார்.
