ஈபிஎஸின் “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” சுற்றுப்பயணம் நாளை கோவையில் தொடக்கம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ஈபிஎஸின் “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” சுற்றுப்பயணம் நாளை கோவையில் தொடக்கம்!

ஈபிஎஸின் “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” சுற்றுப்பயணம் நாளை கோவையில் தொடக்கம்!

Kathiravan V HT Tamil
Published Jul 06, 2025 12:12 PM IST

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னேற்பாடாக அமைகிறது. முதல் கட்டமாக, ஜூலை 7 முதல் 21 வரை கோயம்புத்தூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 34 தொகுதிகளை உள்ளடக்கிய பயணம் தொடங்குகிறது.

ஈபிஎஸின் “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” சுற்றுப்பயணம் நாளை கோவையில் தொடக்கம்!
ஈபிஎஸின் “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” சுற்றுப்பயணம் நாளை கோவையில் தொடக்கம்!

தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற கருப்பொருளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த சுற்றுப்பயணம் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னேற்பாடாக அமைகிறது. முதல் கட்டமாக, ஜூலை 7 முதல் 21 வரை கோயம்புத்தூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 34 தொகுதிகளை உள்ளடக்கிய பயணம் தொடங்குகிறது. இந்த பயணத்தின் மூலம், திமுக ஆட்சியின் குறைபாடுகளை எடுத்துரைத்து, அமைதி, வளர்ச்சி, மற்றும் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுப்பதாக அமையும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். இந்த பயணத்தின், இலச்சினை மற்றும் பிரச்சாரப் பாடல் ஜூலை 5 அன்று சென்னையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் வெளியிடப்பட்டன.  

அவரது சுற்றுப்பயணம் காலை 09:00 மணிக்கு மேட்டுப்பாளையம் தொகுதியில் உள்ள தேக்கம்பட்டி வான பத்திரகாளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாட்டுடன் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து, காலை 10:30 மணிக்கு தேக்கம்பட்டி சாலை மண்டபத்தில் விவசாயிகளைச் சந்தித்து உரையாடுகிறார். பகல் 12:30 மணிக்கு பிளாக் தண்டார் பகுதியில் மதிய உணவை முடித்துக்கொள்கிறார்.

மாலை 04:35 மணிக்கு பிளாக் தண்டார் முதல் மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலை, காந்தி சிலை வரை சாலைப் பேரணி நடத்துகிறார். மாலை 05:00 மணிக்கு மேட்டுப்பாளையம் பேருந்து நிலைய சந்திப்பிலும், மாலை 05:40 மணிக்கு மேட்டுப்பாளையம் தொகுதி, காரமடை சந்திப்பிலும் அமைந்துள்ள பேசும் இடங்களில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றவுள்ளார்.

பின்னர், மாலை 06:45 மணிக்கு கவுண்டம்பாளையம் தொகுதி, பெரியநாயக்கன்பாளையம் சந்திப்பில் அமைந்துள்ள பேசும் இடத்தில் உரையாற்றுகிறார். அதனைத் தொடர்ந்து, நரசிம்மநாயக்கன்பாளையத்தில் 15 நிமிடங்கள் தேநீர் இடைவேளை எடுத்துக்கொள்கிறார். இரவு 08:00 மணிக்கு நரசிம்மநாயக்கன்பாளையம் துடியலூர் ரவுண்டானாவில் உள்ள பேசும் இடத்திலும், இரவு 09:00 மணிக்கு துடியலூர் - சரவணம்பட்டி சாலை, சின்னவேடம்பட்டி பிரிவு, கோவை சக்தி சாலை, சரவணம்பட்டி ஆகிய இடங்களில் உள்ள பேசும் இடத்திலும் உரையாற்றுகிறார். இறுதியாக, இரவு 10:00 மணிக்கு தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு கோவை நகரில் இரவு தங்கவுள்ளார்.