கீழ்பாக்கம் மருத்துவமனையில் நோயாளிக்கு பாலியல் தொல்லை! அரசை விளாசும் ஈபிஎஸ்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  கீழ்பாக்கம் மருத்துவமனையில் நோயாளிக்கு பாலியல் தொல்லை! அரசை விளாசும் ஈபிஎஸ்!

கீழ்பாக்கம் மருத்துவமனையில் நோயாளிக்கு பாலியல் தொல்லை! அரசை விளாசும் ஈபிஎஸ்!

Kathiravan V HT Tamil
Jan 13, 2025 01:14 PM IST

மீண்டும் தலைநகரில், மிக முக்கியமான அரசு மருத்துவமனைகளுள் ஒன்றில், இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது, ஸ்டாலின் மாடல் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது துளியும் இல்லை என்ற வெட்கக்கேடான நிலையை தெளிவாக காட்டிவிட்டது.

கீழ்பாக்கம் மருத்துவமனையில் நோயாளிக்கு பாலியல் தொல்லை! அரசை விளாசும் ஈபிஎஸ்!
கீழ்பாக்கம் மருத்துவமனையில் நோயாளிக்கு பாலியல் தொல்லை! அரசை விளாசும் ஈபிஎஸ்!

இது தொடர்பாக தனது ‘எக்ஸ்’ வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ள கருத்து பதிவில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒருவன் புகுந்து உள் நோயாளியாக இருந்த பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

மீண்டும் தலைநகரில், மிக முக்கியமான அரசு மருத்துவமனைகளுள் ஒன்றில், இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது, ஸ்டாலின் மாடல் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது துளியும் இல்லை என்ற வெட்கக்கேடான நிலையை தெளிவாக காட்டிவிட்டது.

பெண்கள் பாதுகாப்பு பற்றி சட்டமன்றத்தில் வசனம் பேசிய திரு.மு.க.ஸ்டாலின், இப்போது என்ன பதில் சொல்லப் போகிறார்?

#யார்_அந்த_SIR என்று கேட்டாலே எரிச்சல் ஆகும் திரு. ஸ்டாலின் அவர்களே- உங்கள் ஆட்சியில் இதுபோன்ற "சார்"கள் காப்பாற்றப் படுவதால் தான், மேலும் பல "சார்"கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள்.

கீழ்ப்பாக்கம் மருத்துவமனை பாலியல் வழக்கில் கைதானவனுக்கு உச்சபட்ச சட்டப்பூர்வ தண்டனை கிடைக்கப் பெறுவதை உறுதிசெய்ய ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன் என தெரிவித்து உள்ளார்.

சென்னையில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்!

சென்னையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம், அண்ணாநகரில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் வன்கொடுமை

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி அன்று மாணவி ஒருவர், கல்லூரி நண்பர் உடன் பேசிக் கொண்டிருந்த நிலையில், அப்போது வந்த அடையாளம் தெரியாத நபர், இருவரையும் வீடியோ எடுத்ததுடன், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், ஞானசேகரன் என்பவரை கைது செய்தனர். அவர் தப்பியோடி முயன்ற போது கீழே விழுந்ததில் அவருக்கு கை மற்றும் கால்களில் எலும்பு முறிவும் ஏற்பட்டது.  இந்த விவகாரம் தொடர்பாக நடத்திய விசாரணையில் மாணவியிடம் அத்துமீறும் முன்னர் ’சார்’ பெயரில் ஞானசேகரன் செல்போனில் ஒருவரிடம் பேசியதாக தெரிகிறது.

பூதாகரமான யார் அந்த சார்?

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் ஞானசேகரன் ’சார்’ என்று குறிப்பிட்டது யார் என்ற கேள்வி உடன் அதிமுகவினர் சென்னை முழுவதும் போஸ்டர்கள் ஒட்டி இருந்தனர். அதில் #SaveOurDaughters என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தனர். அடுத்து நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரிலும் ’யார் அந்த சார்?’ என்று பதாகைகளை ஏந்தி அதிமுக எம்.எல்.ஏக்கள் கோஷம் எழுப்பியது குறிப்பிடத்தக்கது. 

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.